பாகிஸ்தானில் தலைவிரித்தாடும் பட்டினி; இலவச உணவுக்காக ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 16 பேர் பலி

பாகிஸ்தானில் இலவச உணவு விநியோகம் செய்யும் இடங்களில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 5 பெண்கள், 3 குழந்தைகள் உட்பட 16 பேர் உயிரிழந்தனர். பாக்கிஸ்தானில் இதுவரை இல்லாத அளவுக்கு (35%) அதிக பணவீக்கத்திற்கு மத்தியில்…

பாகிஸ்தானில் இலவச உணவு விநியோகம் செய்யும் இடங்களில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 5 பெண்கள், 3 குழந்தைகள் உட்பட 16 பேர் உயிரிழந்தனர்.

பாக்கிஸ்தானில் இதுவரை இல்லாத அளவுக்கு (35%) அதிக பணவீக்கத்திற்கு மத்தியில் பட்டினி மற்றும் விலைவாசி உயர்வு ஆகியவற்றால் மக்களின் வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், ரம்ஜான் பண்டிகையின் போது இலவச உணவுக்காக ஏராளமான மக்கள் கூடுகிறார்கள்.

பெஷாவர் மையத்தில் கூடிய கூட்டத்தை கட்டுப்படுத்த அரசாங்கத்திற்கு சவாலாக மாறியதால், கூட்டத்தை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தியதாகவும், துப்பாக்கியை வானத்தைப் பார்த்துச் சுட்டதாகவும் உணவுத் துறை அமைச்சர் கூறியதாக சர்வதேச செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இதனால் நூற்றுக்கணக்கான பெண்களும் குழந்தைகளும் பீதியடைந்து ஒருவரையொருவர் தள்ளிக்கொண்டு ஓடியுள்ளனர். அவர்களில் சிலர் சாக்கடையில் விழுந்தனர். பலர் தங்கள் சமநிலையைக் காப்பாற்றிக் கொண்டு தப்பி ஓடினார்கள்.

இந்த சம்பவத்தில் பெஷாவரில் 11 பேரும், கராச்சி மற்றும் பிற இடங்களில் 5 பேரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.