இன்ஸ்டாகிராமில் போலி முகவர்களிடம் 30 ஆயிரம் பணத்தை இழந்த கல்லூரி மாணவி; விரக்தியில் எடுத்த விபரீத முடிவு

இன்ஸ்டாகிராமில் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவி போலி முகவர்களிடம் 30ஆயிரம் பணத்தை இழந்ததால் விரக்தியில் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு வணிகவியல்…

இன்ஸ்டாகிராமில் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவி போலி முகவர்களிடம் 30ஆயிரம் பணத்தை இழந்ததால் விரக்தியில் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு வணிகவியல் பயின்று வரும் 19 வயது மாணவி ஒருவர் தனது தாயுடன் வசித்து வருகிறார். மாணவியின் தாயார் தன் கணவர் பிரிந்து சென்றதிலிருந்து வீட்டிலிருந்தபடியே சில பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு மகாலட்சுமி இன்ஸ்டாகிராமில் 75பங்கு வாங்கினால்
15நிமிடம் முதல் 20 நிமிடங்களில் இருமடங்காக லாபம் கிடைக்கும் என்ற வியாபார
விளம்பத்தைப் பார்த்து அதில் முதலீடு செய்து பங்குகளை வாங்கியுள்ளார்.

இவ்வாறாக இரவு 11மணி அளவில் ஆரம்பித்த அவர் விடியற்காலை வரை தனது தாயின் வங்கிக் கணக்கிலிருந்த 30 ஆயிரத்தைச் செலவு செய்ரு பங்குகளை வாங்கி 60ஆயிரம் வரை வென்றுள்ளார்.

பின்னர் தாம் பங்குகள் வாங்கி லாபம் பார்த்த பணத்தை ஆன்லைன் மூலம் விற்றால்
செய்ய முயன்ற போது தான் தெரிந்துள்ளது, இவ்வளவு நேரம் தாம் வாங்கியது அனைத்தும்”போலியான பங்குகள் என்று.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி தாயிடம் கூறினால் எங்கே தாய் ஏதேனும் திட்டி
விடுவாரோ என்ற”பயத்தில் செய்வதறியாது தனது அறையில் தாயின் புடவையால் மின்விசிறியில் தூக்கிட்டு பரிதாபமாகத் தனது உயிரை மாய்த்துக் கொண்டார்

காலை மகளை எழுப்ப சென்ற தாய்  அதிர்ச்சியடைந்து முத்தியால் பேட்டை
காவல்துறைக்குத் தகவல் அளித்ததன் பேரில் பிரேதத்தைக் கைப்பற்றி போலீசார் அரசு
ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து இன்ஸ்டாகிராம் போலி பக்கத்தினை கண்காணித்து வருகின்றனர். மேலும் அவரது தாயார் இதே போன்று ஹிஜாவு நிறுவனத்தில் பணத்தைக் கட்டி ஏமாந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. போலியான வியாபார பக்கத்தை நம்பி முதலீடு செய்து ஏமாந்து மாணவி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.