50 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக சென்னை பெரம்பூர் ஐ.சி.எஃப் தொழிற்சாலையின் முன்னாள் முதன்மை பொறியாளர் காத்பால் உள்ளிட்ட 5 பேரை சி.பி.ஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
சென்னை பெரம்பூர் ஐ.சி.எஃப் தொழிற்சாலையில் இயந்திரப் பிரிவு முதன்மை பொறியாளராக பணியாற்றி வந்த காத்பால், கடந்த மார்ச் மாதம் ஓய்வு பெற்றுள்ளார். இவர் கடந்த 2019ம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகளில், சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு 5 கோடியே 89 லட்சம் லஞச்ம் பெற்று முறைகேடாக டெண்டர்களை ஓதுக்கீடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட சிபிஐ, தனியார் நிறுவனத்தை சேர்ந்த இயக்குநர் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தது. லஞ்சதொகை 50 லட்சம் ரூபாயினை டெல்லியிலுள்ள காத்பாலின் சகோதரரிடம் ஒப்படைக்கப்பட்டதை கண்டறிந்த சிபிஐ, இது தொடர்பாக காத்பால் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர்.
அவரிடமிருந்து 2 கோடியே 75 லட்சம் ரூபாய் ரொக்கம், சுமார் 23 கிலோ தங்கம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.