கோவையில் அதிகாலை முதல் வரிசையில் காத்திருந்த பொதுமக்களுக்கு தடுப்பூசி டோக்கன் வழங்காமல், வீடுகளுக்கு சென்று கட்சி நிர்வாகிகள் டோக்கன் விநியோகம் செய்வதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கோவைமாவட்டம் சொலவம்பாளையம் ஊராட்சியில் உள்ள சிக்கலாம்பாளையம் அரசு உயர்நிலை பள்ளியில் 400 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருவதாக இருப்பதாக தகவல் அளிக்கப்பட்டது. இதனால், அங்கு நள்ளிரவு முதலே பொதுமக்கள் வரிசையில் நிற்க துவங்கினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் அங்கு வந்த கிராம நிர்வாக அலுவலர் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் வார்டு வாரியாக டோக்கன் விநியோகம் செய்யப்பட்டுவிட்டதாகவும், டோக்கன் இருப்பவர்கள் மட்டும் வரிசையில் வேண்டும் எனவும் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், ஏராளமானோர் வரிசையில் நின்று கொண்டு இருக்கும் போது, வீட்டில் இருப்பவர்களுக்கு எப்படி டோக்கன் கொடுக்கலாம் என கேள்வி எழுப்பினர்.
தடுப்பூசி போடாமல் செல்ல மாட்டோம் என்றும் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வார்டு உறுப்பினருக்கு ஒருவருக்கு 40 டோக்கன் வீதம் பிரித்து கொடுத்ததாகவும், பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.