பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார்.
அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி, மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். அதிமுக சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் அண்ணாவின் நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து, அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், பாண்டியராஜன் மற்றும் ஓ.எஸ்.மணியன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் பங்கேற்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன், ஜெயலலிதாவின் நினைவிடத்தில் இறுதிகட்ட பணிகள் நடைபெறுவதால் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். அதிமுக- அமமுக இணைப்பு சாத்தியமா என்ற கேள்விக்கு பதிலளித்த ஓ.எஸ்.மணியன், இதுகுறித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் மூத்த நிர்வாகிகள் தான் முடிவு செய்வார்கள் என கூறினார்.