துக்க வீட்டில் இளம்பெண் பகீர் குற்றச்சாட்டு… விழி பிதுங்கிய போலீசார்!

நாமக்கல் அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு உயிரிழந்த விவகாரத்தில் 5 மணி நேரமாக காவல்துறை வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. ராசிபுரம் குச்சிக்காடு பகுதியில் கூலித் தொழிலாளியான கண்ணாயிரம் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். அவருடைய…

நாமக்கல் அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு உயிரிழந்த விவகாரத்தில் 5 மணி நேரமாக காவல்துறை வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

ராசிபுரம் குச்சிக்காடு பகுதியில் கூலித் தொழிலாளியான கண்ணாயிரம் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். அவருடைய மூத்த மகள் அனிதா, தனியார் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். மேலும் அவர், வல்லரசு என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். சில நாட்களாக அவர் மிகவும் வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. திடீரென்று அனிதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு உயிரிழப்பு செய்து கொண்டுள்ளார். இதையடுத்து, அனிதாவின் காதலன் வல்லரசு மற்றும் அவரது நண்பர்கள் 2 பேர் அனிதாவின் வீட்டுக்கு வந்து விசாரித்துள்ளனர்.

அப்போது இறந்த மாணவியின் தங்கை, தன்னுடைய சகோதரி இறந்ததற்கு நீங்கள்தான் காரணம் என கூறி வல்லரசுவை அடித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், விசாரிக்க வந்த இளைஞர்களை கடுமையாக தாக்கியுள்ளனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் இளைஞர்களை மீட்டு அழைத்து செல்ல முயன்றனர். ஆனால், அனிதாவின் உறவினர்கள் 300-க்கும் மேற்பட்டோர் காவல்துறையினரின் வாகனங்களை சுற்றிவளைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply