பார்வையாளர்கள் இல்லாமல் இந்தியா- தென்னாப்பிரிக்கா பாக்சிங் டே டெஸ்ட்!

இந்தியா- தென்னாப்பிரிக்காவுக்கு இடையிலான பாக்சிங் டே டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெற இருக்கிறது. இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து, 3 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில்…

இந்தியா- தென்னாப்பிரிக்காவுக்கு இடையிலான பாக்சிங் டே டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெற இருக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து, 3 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் வரும் 26-ஆம் தேதி செஞ்சூரியனில் நடக்கிறது. விராத் கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டியின் பாக்சிங் டே கிரிக்கெட் போட்டி பார்வையாளர் கள் இல்லாமல் நடத்தப்பட இருக்கிறது.

கிறிஸ்துமஸுக்கு மறுநாளை பாக்சிங் டே என்கிறார்கள். கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பின் வரும் முதல் வேலை நாளன்று, பல்வேறு நாடுகளில் கடைநிலை ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. தபால்காரர்கள், பத்திரிகை விநியோகிக்கும் சிறுவர்கள், வீட்டுப் பணியாளர்களின் சேவையை பாராட்டி, அவர்களுக்கு அன்று பரிசு, வெகுமதி அளிப்பது வழக்கம். இதை பாக்சிங் டே என்று இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் கொண்டாடுகிறார்கள்.

இந்தியா – தென்னாப்பிரிக்கா பங்கேற்கும் முதல் டெஸ்ட் போட்டி, கிறிஸ்துமஸுக்கு மறுநாள் நடப்பதால், அதை பாக்சிங் டே போட்டி என்கிறார்கள். தற்போது அங்கு ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருவதால், பார்வையாளர்கள் இல்லாமல் போட்டியை நடத்த தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. அப்படியே நேரடியாக போட்டியை பார்க்க வருபவர்கள் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளுக்குப் பின் அனுமதிக்கப்படுவார்கள். அப்படி சுமார் 2 ஆயிரம் பார்வையாளர்கள் மட்டும் அனுமதிக்கப்படலாம் என தெரிகிறது.

இருந்தாலும் அரசு கடைசி நேரத்தில் என்ன முடிவு எடுக்கிறதோ அதுதான் தொடரும் எனவும் இப்போது டிக்கெட்டுகள் விற்கப்படவில்லை என்றும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்……..

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.