இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ஆனார் கே.எல்.ராகுல்

இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக, கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து, 3 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது…

இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக, கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து, 3 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் வரும் 26-ஆம் தேதி செஞ்சூரியனில் நடக்கிறது. விராத் கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக ரஹானே இருந்தார். அவருடைய மோசமான ஃபார்ம் காரணமாக அந்த பதவி அவரிடம் இருந்து பறிக்கப்பட்டு, ரோகித் சர்மாவுக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில் வலை பயிற்சியின் போது ஏற்பட்ட தசைப்பிடிப்பால் ரோகித் சர்மா டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார். இதனால் தென்னாப்பிரிக்க தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் அந்தப் பதவிக்கு கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் இதைத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய வீரர்கள் தங்களை தனிமைப் படுத்திக் கொண்டனர். கொரோனா பரவிவிடக் கூடாது என்பதற்காக, அவர்கள் தங்கியுள்ள சொகுசு விடுதியின் மொத்த அறைகளையும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியமே முன்பதிவு செய்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.