மக்களுக்கான கலையை அவர்களிடம் கொண்டு சேர்ப்பதே ‘மார்கழியில் மக்களிசை’ – பா.ரஞ்சித்

பெண்குழந்தைகளுக்கு நேரிடும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக, பெற்றோர்களுக்கு முதலில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் வலியுறுத்தியுள்ளார். கோவையில் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியை தொடங்கி வைத்த…

பெண்குழந்தைகளுக்கு நேரிடும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக, பெற்றோர்களுக்கு முதலில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் வலியுறுத்தியுள்ளார்.

கோவையில் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியை தொடங்கி வைத்த இயக்குநர் பா.ரஞ்சித் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார், அப்போது மக்களுக்கான கலையை அவர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருவதாக கூறினார்.

இசைக்கு தரத்தை நிர்ணயம் செய்து, குறிப்பிட்டவர்களுக்கு மட்டுமே மேடை சொந்தம் என்றிருந்தத பிம்பம் தற்போது உடைந்துள்ளதாக பா.ரஞ்சித் தெரிவித்தார். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான சரியான விழிப்புணர்வை முதலில் பெற்றோர்களுக்கு ஏற்படுத்திட வேண்டும் எனவும் கூறினார்.

https://twitter.com/Neelam_Culture/status/1472760733947424768

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.