ஜனநாயகத்தை அழிக்கத் துடிக்கும் ஹமாஸ், ரஷ்யா – அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேச்சால் சர்ச்சை!

ஹமாஸ் மற்றும் ரஷ்யா இரண்டும் ஜனநாயகத்தை அழிப்பதற்கு தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.  தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களிடையே உரையாற்றிய ஜோ பைடன், மிகவும் உணர்ச்சி வசப்பட்ட…

ஹமாஸ் மற்றும் ரஷ்யா இரண்டும் ஜனநாயகத்தை அழிப்பதற்கு தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களிடையே உரையாற்றிய ஜோ பைடன், மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில், இஸ்ரேல் – ஹமாஸ் போர் குறித்து உரையாற்றுகையில், ஹமாஸ் அமைப்பையும் ரஷ்யாவையும் ஒப்பிட்டுப் பேசியிருக்கிறார்.

ஹமாஸ் அமைப்பும், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடினும் வெவ்வேறு வகையான அபாயங்கள். ஆனால், அவர்கள் ஒரே ஒரு விஷயத்தில் ஒற்றுமையுடன் இருக்கிறார்கள். அதுதான், அண்டை நாடுகளின் ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்தி, அதனை முற்றிலும் அழித்தொழிப்பது என்பது என்று குறிப்பிட்டார். இந்த உரையில், இஸ்ரேல் மற்றும் உக்ரைனுக்கு அமெரிக்கா உதவும் என்பதையும் தெரிவித்துக்கொண்டுள்ளார். ஹமாஸ் மற்றும் ரஷ்யா இரண்டும் ஜனநாயகத்தை அழிப்பதற்கு தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார் ஜோ பைடன்.

ஒரு பெரிய தேசம் என்ற அளவில், நமது பொறுப்பில் வெறுப்பு அரசியலுடன், சிறு பாகுபாட்டைக் கூட நாம் அனுமதிக்க முடியாது. ஹமாஸ் போன்ற பயங்கரவாதிகளையும், புதின் போன்ற கொடுங்கோலர்களையும் வெற்றி பெற விட்டுவிட முடியாது, விடவும் மாட்டோம். அதை நான் அனுமதிக்க மறுக்கிறேன் என்று நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக ஆற்றிய உரையில் குறிப்பிட்டார்.

இந்த உரையின் போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அமெரிக்கர்களை இஸ்ரேல் மற்றும் உக்ரைனுக்குப் பின்னால் நிற்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.