18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி எப்போது தொடங்கும்?

தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி ஓரிரு நாளில் தொடங்கும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள நியாய விலைக்கடையில், கொரோனா நிவாரண நிதி முதல்…

தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி ஓரிரு நாளில் தொடங்கும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள நியாய விலைக்கடையில், கொரோனா நிவாரண நிதி முதல் தவணையாக 2000 ரூபாயை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.

மேலும், 18 வயது நிறைவடைந்தோருக்கு தடுப்பூசி செலுத்த ஏற்கனவே மத்திய அரசுக்கு 46 கோடி ரூபாய் முன் பணம் செலுத்தியிருப்பதாகக் கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஒரிரு நாளில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தமிழகத்தில் தொடங்கும் என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.