சென்னையில் பாஜகவினர் முற்றுகை போராட்டம் – பேரணியாக சென்ற அண்ணாமலை உள்ளிட்டோர் தடுத்து நிறுத்தம்

அமைச்சர் சேகர்பாபு பதவி விலக வலியுறுத்தி, சென்னையில் பாஜகவினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்ட, இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பதவி விலகக்கோரி, பாஜக சார்பில்…

அமைச்சர் சேகர்பாபு பதவி விலக வலியுறுத்தி, சென்னையில் பாஜகவினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்ட, இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பதவி விலகக்கோரி, பாஜக சார்பில் அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் இன்று நடைபெற்றது.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக மாநிலத் துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, பாஜக மேலிட இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட புறப்பட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தடுத்து நிறுத்தப்பட்டார்.

இதையும் படியுங்கள் : வெற்றிமாறனுடன் மீண்டும் ஒருமுறை!!- சூரி நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, சனாதன விவகாரம் குறித்து, திமுகவினர் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக சார்பில் புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்தார். இதற்காக, முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தலைமையில், 5 பேர் கொண்ட கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும் பொதுமக்களுக்காக தான் இந்த போராட்டம் நடத்தப்படுவதாக தெரிவித்த அண்ணாமலை, கைதாக தயாராக வந்ததாகவும், காவல்துறையை மதிக்கும் கடமை தங்களுக்கு இருப்பதாகவும் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.