ஃபக்த் ஃபாசில் நடிக்கும் அடுத்த படத்தின் அப்டேட்…

ஃபக்த் ஃபாசில் நடிக்கும் அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகி அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.  சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்ற மலையாளப்படம் ரோமன்சம். பெங்களூரில் நண்பர்களுடன் தங்கியிருக்கும் ஒரு வீட்டில் நடக்கும் சுவாரசியமான சம்பவங்களே…

ஃபக்த் ஃபாசில் நடிக்கும் அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகி அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. 

சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்ற மலையாளப்படம் ரோமன்சம். பெங்களூரில் நண்பர்களுடன் தங்கியிருக்கும் ஒரு வீட்டில் நடக்கும் சுவாரசியமான சம்பவங்களே ரோமன்சம். பேய் வரவழைக்கும் ஓஜா போர்ட் விளையாடு அவர்களை எங்கு கொண்டு செல்கிறது என ஜாலியாக எடுக்கப்பட்ட த்ரில்லர் படம். மலையாளம் மட்டுமல்ல தமிழிலும் டப் செய்யப்பட்டு நல்ல வரவேற்பினை பெற்றது குறிப்பிடத்தக்கது.

பிரபல மலையாள நடிகர் சௌபின் ஷாகிர், அர்ஜுன் அசோகன் முக்கிய கதாபத்திரங்களில் நடித்திருந்தனர். அறிமுக இயக்குநர் ஜிது மாதவன் இயக்கியிருந்தார். இதில் செம்பன் வினோத் சயீத் எனும் கதாபத்திரத்தில் நடித்திருந்தார்.

விக்ரம், மாமன்னன் வெற்றிக்குப் பிறகு ஃபக்த் ஃபாசில் தமிழில் மிகவும் பிரபலமான நடிகராக அறியப்பட்டு வருகிறார். மலையாளத்தில் சிறப்பான படங்களை தேர்வு செய்து நடிக்கும் ஃபகத் தமிழ், தெலுங்கில் வில்லனாக நடித்து வருகிறார்.

தற்போது ரோமன்சம் இயக்குநர் ஜிது மாதவான் ஆவேஷம் எனும் படத்தினை இயக்கியுள்ளார். இதில் ரோமன்சம் பட செம்பன் வினோத் நடித்த சயீத் எனும் கதாபாத்திரத்தில்தான் ஃபகத் ஃபாசில் நடிக்கிறார்.

இது குறித்து செம்பன் வினோத், “சயீத் கதாபத்திரத்தினை மையப்படுத்தி ஆவேஷம் படம் இருக்கும். இயக்குநரின் கல்லூரியில் நிகழ்ந்த கதையாக இப்படம் இருக்கும்” எனக் கூறியுள்ளார். ரோமன்சம் படமும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பிரபல மலையாள நடிகர் செம்பன் வினோத் தமிழில் லோகேஷ் கனகராஜ் படமான விக்ரம் படத்தில் நடித்திருந்தார். ஜனவரி 2024இல் ஆவேஷம் படம் வெளியாகுமென தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.