2026ல் தமிழ்நாட்டில் பாஜக கண்டிப்பாக ஆட்சி அமைக்கும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மயிலாப்பூரில் நடைபெற்ற திராவிட மாயை என்கிற புத்தக வெளியீட்டு விழாவில் பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், திராவிடம் என்பது குழப்பம் நிறைந்த ஒன்று. திமுக தொடங்கப்பட்டதே குழப்பத்தில் தான். தேசிய குற்ற ஆவண புள்ளிவிவரங்களின்படி தமிழ்நாட்டில் தீண்டாமையில் திருவாரூர் மாவட்டம் தான் முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் பதிவான 600 தீண்டாமை வழக்குகளில் 156 திருவாரூரில் பதிவானவை.
திமுகவை வீழ்த்துவது பெரிய காரியமில்லை. திமுகவும் பெரிய வெங்காயமும் ஒன்று அதனை உரிக்க உரிக்க அதில் ஒன்றும் இருக்காது. திமுக அமைச்சர்கள் சம்பந்தமில்லாமல் பேசுகிறார்கள் கோடைகாலத்தில் மழை வந்தாலும் அதற்கு காரணம் திராவிட மாடல் என்று கூறுவார்கள்.
தமிழ்நாட்டில் இருக்கும் 90 சதவீத அமைச்சர்களுக்கு டெல்லிக்கு சென்றால் ஆங்கிலத்தில் பேசக்கூட முடியாதவர்கள். விமானம் மூலம் ஏற்றி விட்டால் கூட தனியாக டெல்லி சென்று ஆங்கிலம் தெரியாததால் தமிழ்நாட்டிற்கான ஒரு பைசா நிதியை கூட அவர்களால் வெற்றிபெற முடியாது.
தமிழ்நாட்டில் மக்கள் தற்பொழுது அதிக அளவில் மக்கள் கேள்விகள் கேட்க ஆரம்பித்துள்ளனர் எனவே தொடர்ந்து மக்களை ஏமாற்ற முடியாது. திராவிட மாயை ஒழிப்பதற்கு தான் திராவிட மாடல் கட்சி செயல்பட்டு வருகிறது. எந்த ஒரு தலைமுறையினரும் மூன்றாண்டுகளுக்கு மேல் ஒரு தலை தூக்கி நிற்பது மிகவும் கடினம் என்று கூறினார்.
2024 ஆம் ஆண்டு இந்தியாவில் ஒரு மைல் கல்லாக இருக்கப் போகிறது. பாஜகவை நோக்கி மக்கள் வெள்ளம் போல் திரண்டு வருகிறார்கள். 2026 ல் தமிழகத்தில் பாஜக கண்டிப்பாக ஆட்சி அமைக்கும் அதனை யாராலும் தடுக்க முடியாது என்று கூறினார்.








