நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் வெளியானதில் இருந்தே பல விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இஸ்லாமியர்களை தீவிரவாதியாக சித்தரிப்பது போன்ற தர்கமான விமர்சங்களை அனைத்து தரப்பு முற்போக்கு சக்திகளும் எழுப்பியிருந்தனர். இவற்றையெல்லாம் தாண்டி துப்பாக்கிகளை கொண்ட தீவரவாத கும்பலை வெறும் கத்தியை கொண்டே வீர ராகவன் வேட்டையாடுவது, காரில் பறப்பது, fighter jet எனப்படும் போர் விமானத்தை ஹெல்மெட் அணியாமல் ஓட்டுவது, மணிக்கு ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் jet-ல் இருந்துகொண்டு எதிரில் வரும் jet-ல் இருக்கும் pilot-க்கு வணக்கம் வைப்பது போன்ற வீர ராகவனின் பல்வேறு சாகசங்களும் இணையத்தில் வைத்து செய்யப்பட்டன.
மிகைப்படுத்தப்பட்ட சண்டை காட்சிகள், லாஜிக் மீறல்கள் தான் இந்த ட்ரால்களுக்கு காரணம் என்று சொல்லப்பட்டாலும் இதைவிட அதிக லாஜிக் மீறல்களை கொண்ட கே.ஜி.எஃப் திரைப்படத்தை மக்கள் கொண்டாடித்தீர்க்கிறார்கள். நாம் ஏற்கனவே சொன்னது போலவே எந்த படத்திற்கும் திரைக்கதை அமைப்பும், கதாப்பாத்திரங்களின் வடிவமைப்பும் தான் வேர். இவற்றில் ஆடியன்ஸின் பல்ஸை பிடித்துவிட்டால் போதும், மற்ற அனைத்தையும் ஏற்றுக்கொள்வதோடு கொண்டாடவும் செய்வார்கள். விஜயின் கில்லி படத்தையே எடுத்துக்கொள்வோம், மாடிக்கு மாடி தாவுவது, தனக்கு தானே சுளுக்கெடுத்துகொண்டு பறந்து அடிப்பது போன்ற அசாத்திய சாகசங்கள் அதிலும் இருக்கும். ஆனால் இதுவரை அந்த காட்சிகள் விமர்சிக்கப்பட்டதில்லை. ஆனால் குருவியில் அவர் பறந்த காட்சிகள் எல்லாம் இன்றைக்கும் ட்ரால் மெட்டீரியலாகிறது.
பீஸ்ட் திரைப்படம் திரைக்கு வந்து கடுமையான விமர்சனங்களால் வைத்து செய்யப்பட்ட நிலையில் OTT தளத்தில் வெளியாகி மீண்டும் இரண்டாவது ரவுண்டுக்கு பீஸ்டை துவைக்க நெட்டிசன்கள் துவைக்கத்தொடங்கியுள்ளனர். இந்நிலையில் துபாய் சென்று வந்த வடிவேலு தன் ஊர் மக்களிடம், ‘இதுக்கு பேரு தான் இங்க பஸ்ஸு, துபாய்ல இதுக்கு பேரு குப்பை லாரி’ என லந்து கொடுத்துக்கொண்டிருப்பார் அல்லவா!.. அதே போல வட இந்தியாவை சேர்ந்த ஓய்வு பெற்ற விமானி ஒருவர், விஜய் ஜெட் ஓட்டும் காட்சிகளை தன் ட்விட்டர் தளத்தில் பகிர்ந்து, எனக்கு இதில் பல கேள்விகள் இருக்கிறது என கிண்டலடித்தார்.
பல்வேறு வட இந்தியர்களும் அதை ரீட்வீட் செய்து அந்த மாபெரும் கலாய்த்தலில் பங்குபெற்று கிக்கிபிக்கி செய்துகொண்டிருந்தனர். அந்த கடுமையான கலாய்த்தலில் ஈடுபட்டவர்களின் டைம்லைன் சென்று பார்க்கும் போது பலரும் ஷாருக்கான், சல்மான் கான், ரித்திக் ரோஷன், அக்ஷய் குமார் ரசிகர்களாக இருந்தை பார்த்து குபீர் என பலருக்கு சிரிப்பு வந்திருக்கலாம். இதைவிட பல அரியவகை சாகசங்களை அந்த நடிகர்கள் செய்திருக்கிறார்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். சமீப காலங்களில் தென்னிந்திய சினிமாக்களின் அபரிமிதமான பாய்ச்சலால் பாலிவுட்டும் வட இந்தியர்களும் மிரண்டு போயுள்ளதின் வெளிப்பாடே இது என்றும் விஜய் ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
https://twitter.com/sajaniaf/status/1525822410930688000
இந்திய சினிமாக்களை விட்டுவிடுவோம் ஹாலிவுட்டின் ஜேம்ஸ் பாண்ட் படங்களில் ஒன்றில் fighter jet ஓட்டும் போது ஹெல்மெட் மட்டுமின்றி, ஆக்ஸிஜன் மாஸ்க் கூட இல்லாமல் ஓட்டுவர் அதில் bond-ஆக வரும் ‘ரோஜர் மூர்’. 90களுக்கு பிறகே இதுபோன்ற லாஜிக் மீறல்களை குறைத்துக்கொண்டு வந்தார்கள்(இன்றும் ஹாலிவுட்டில் பல கிரிகாலன் மேஜிக் வித்தைகள் நிகழ்த்தப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது). பாலிவுட் காரர்களை விட்டுவிடுவோம் கோலிவுட்டின் அஜித், ரஜினி, கமல் ரசிகர்கள் கூட பீஸ்டுதான் கோலிவுட் மாணத்தை வாங்கிவிட்டது என்று போடும் ட்வீட்டுகளை பார்க்கும் போது, ‘நாங்கெல்லாம் இருந்த இருப்புக்கு..” என்ற வடிவேலுவின் வாசகம் தான் நினைவுக்கு வருகிறது என விஜய் ரசிகர்கள் வெடித்து சிரிக்கிறார்கள்.
அதையெல்லாம் விடுவோம் fighter jet ஓட்ட ஹெல்மெட் போட்டே ஆக வேண்டுமா என்றால் போடத்தான் வேண்டும். ஆனால் போடாமலும் ஓட்டமுடியும் என்பதே வல்லுநர்களின் கருத்தாக உள்ளது. fighter jet ஹெல்மெட்டின் முக்கியமான வேலைகள் இவைகள் தான்.
1. எதிரிகள் தாக்கும் போதும், அதிலிருந்து தப்பிக்கும் போதும், வாணில் காற்று கொந்தளிப்புகள் வரும் போதும் ஜெட் விமானங்கள் அதிர்வுக்கும் குலுங்கலுக்கும் உண்டாகலாம். ஜெட் சிறிய அளவில் இருப்பதால் அதன் மேற்கூரை பகுதியில் pilot மோதப்படலாம். அதிலிருந்து தலையை பாதுகாக்க ஹெல்மெட் பயன்படுகிறது.
2. எதிரிகளால் தாக்கப்பட்ட பின்பு தங்களின் சீட்டோடு Pilot-கள் வெளியேறும் வசதி போர் விமானத்தில் உள்ளது. அந்த சீட்டில் பாராஷூட்டுடன், சிறிய ராக்கெட் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகளை பொறுத்தப்பட்டிருக்கும். சில ஜெட்களில் pilot வெளியேறுவதற்கு வசதியாக canopy எனப்படும் மேற்கூரை கழண்டு கொள்வது போல் வடிவமைக்கப்பட்டிருக்கும். ஒரு சில ஜெட்-களில் Explosive Strips எனப்படும் வெடிப்பட்டைகள் கண்ணாடி கூறையில் பொறுத்தப்பட்டிருக்கும். விபத்து நடந்த கணமே லேசாக வெடித்து அந்த கண்ணாடி கூறை நொறுங்கிவிடும். 3 முதல் 4 நொடிகளுக்குள் நிகழும் இந்த process-ல் இருந்து pilot பாதுகாப்பாக வெளியேறவும், தரையிறங்கவும் ஹெல்மட் அவசியமாகிறது.
3.போர் விமானங்களின் எஞ்சின் சத்தம் மிக அதிகமாக இருக்கும். அந்த இறைச்சலில் இருந்து காதுகளை பாதுகாப்பதோடு, மற்ற ஜெட் வீரர்களோடும் ராணுவ கட்டுப்பாட்டு அறையுடனும் தொந்தரவு இல்லாமல் பேசவும், கேட்கவும் ஹெல்மட் உதவுகிறது.
4. ஆயிரக்கணக்கான அடி உயரத்திற்கு மேலே போகும் போது, சூரியனிலிருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்வீச்சும் அதிகரிக்கிறது. இதனால் pilot-க்கு பார்வை குறைபாடு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதில் இருந்து பாதுகாக்கவும் ஹெல்மெட் பயன்படுகிறது.
5.Air mask எனப்படும் ஆக்ஸிஜன் கொடுக்கக்கூடிய முகக்கவசத்தை பொறுத்தவும் இந்த ஹெல்மெட் பயன்படுகிறது. ஹெல்மெட் அணியாமலும் air mask அணிய முடியும் எனவும் வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். 10,000 அடிகளுக்கு மேல் பறக்கும் போது ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்படும்போது இந்த Air mask சமன்செய்கிறது.
ஆக பீஸ்ட் படத்தில் வீரராகவன் ஹெல்மெட் அணியாததால் அவருக்கு மேற்குறிய பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கலாம் அல்லது ஏற்படாமலும் இருந்திருக்கலாம். missile attack குறுகிய உயரத்திலேயே நடப்பதால் மாஸ்க் தேவையில்லை என்று வீரராகவன் அதை கழட்டியிருக்கலாம். கதாநாயக சாகசத்தில் இதெல்லாம் உலக சினிமாக்களில் இயல்பாக நடைபெறுவதையே நாம் பார்க்கிறோம். இருந்தாலும் எதிரே வரும் ஜெட்டிற்கு வணக்கம் வைப்பதெல்லாம் extra doseகள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
இருந்தாலும், இதை கலாய்க்கும் கமல் ரசிகர்கள் தசாவதாரத்தில் உலகநாயகன் பைனாக்கூலரை வைத்து ஹெலிகாப்டரில் பறந்தபடியே வைரஸை பார்த்ததை மறந்துவிடக்கூடாது. லிங்காவில் ரஜினி ஏர் பலூனில் பறந்து உருண்டதை அவரின் ரசிகர்கள் மறுத்துவிடமுடியாது. விவேகத்தில் கைதுப்பாக்கிக்கொண்டு கீழே விழுந்தபடி ஹெலிகாப்டரை அஜித் சுட்டுத்தள்ளியதை அவரின் ரசிகர்களும் ரசித்துவிடமுடியாது.
இந்நிலையில், இதிலெல்லாம் போகாத மாணமா பீஸ்டில் போய்விடப்போகிறது என பதிலடி கொடுத்துவருகின்றனர் விஜய் ரசிகர்கள். கேலிகளும் கிண்டல்களும் விஜய்க்கு புதிதல்ல! அதையெல்லாம் கடந்து தானே தொடர்ந்து நம்மை Entertain செய்வதோடு மாஸான வசூல் மன்னனாகவும் வலம்வந்துகொண்டிருக்கிறார். இதையும் கடந்து மாபெரும் வெற்றியுடன் மீண்டும் திரைக்கு வந்து நம்மை மகிழ்விப்பார் என்று நம்புவோம். because he is Meaner Leaner Stronger!









