“மத்தியில் 3-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும்” – உத்தரவாதம் அளித்த பிரதமர் மோடி!

மத்தியில் 3-வது முறையாக மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ரூ.17,300 கோடி மதிப்பில் உள்கட்டமைப்பு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.…

மத்தியில் 3-வது முறையாக மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ரூ.17,300 கோடி மதிப்பில் உள்கட்டமைப்பு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். வ.உ.சி. துறைமுக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி,  மத்திய அமைச்சர் சர்பனந்தா சொனோவால், மத்திய இணையமைச்சர் எல்.முருகன்,  தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு,  இஸ்ரோ தலைவர் சோம்நாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தமிழில் ‘வணக்கம்’ என கூறி பிரதமர் நரேந்திர மோடி தனது உரையை தொடங்கினார். தொடர்ந்து அவர் பேசியவதாவது :

““தூத்துக்குடியில் தொடங்கப்பட்டுள்ள புதிய திட்டங்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு உந்துதலாக அமையும்.  இந்த திட்டங்கள் அனைத்தும் நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும்.  திட்டங்களின் தொடக்கம் என்பது முன்னேற்றம், வளர்ச்சி, நம்பிக்கைக்கான எடுத்துக்காட்டு. மக்களின் சேவகனாக இருந்து, நான் உங்களின் தேவைகளை விருப்பங்களை நிறைவேற்றுவேன்.தமிழ்நாட்டில் மத்திய அரசு கொண்டு வரும் பல திட்டங்கள் மறைக்கப்படுகின்றன. தமிழ்நாடு வரும்போதெல்லாம் தமிழர்கள் என் மீது பாசத்தைப் பொழிகின்றனர். தமிழர்கள் என் மீது காட்டிய அன்பைப் பலமடங்காகத் திருப்பித் தருவேன்.  நான் உங்களுக்கு ஒரு உத்தரவாதம் தருகிறேன்.  3வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும். மோடி இந்த கேரண்டியை தருகிறேன்”

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.