தமிழக சட்டப்பேரவை தேர்தல்; இறுதி கட்டத்தை எட்டிய வாக்கு சேகரிப்பு

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு, இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், நாளையுடன் தேர்தல் பரப்புரை நிறைவடைகிறது. தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் வரும் 6ம் தேதி நடக்கவுள்ளது. இதற்கான தேர்தல் பரப்புரை நாளை…

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு, இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், நாளையுடன் தேர்தல் பரப்புரை நிறைவடைகிறது.

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் வரும் 6ம் தேதி நடக்கவுள்ளது. இதற்கான தேர்தல் பரப்புரை நாளை இரவு 7 மணியுடன் நிறைவு பெறும், என தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு அறிவித்திருந்தார். இந்நிலையில், இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில், முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ள முக்கிய வாக்குறுதிகளையும், தொகுதியில் தாங்கள் செயல்படுத்தவுள்ள திட்டங்கள் குறித்த வாக்குறுதிகளையும் அச்சிட்டு, துண்டு பிரசுரங்களாக வீடுகள் தோறும் அளிக்கும் பணியில், அரசியல் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட, மாநில, தேசிய தலைவர்களும் தமிழகத்தில் பரப்புரையில் ஈடுபட்டனர். மேலும், ஆட்டோ, வேன்களில் ஒலிபெருக்கி பிரச்சாரமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாளை தேர்தல் பரப்புரை முடிவடையும் நிலையில், வாக்கு சேகரிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.