அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது போல், குடும்பத்தில் ஒருவருக்கு நிச்சயமாக அரசு வேலை வழங்கப்படும் என எல்.முருகன் வாக்குறுதி அளித்தார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் வேட்பாளராகப் போட்டியிடும் நிலையில், நகரம், கிராமம் என பல்வேறு பகுதிகளிலும் பல தரப்பட்ட மக்களையும் சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தாராபுரம் தொகுதிக்கு உட்பட்ட குண்டடம், மேட்டுக்கடை, தும்பலப்பட்டி ஆகிய பகுதிகளில், பரப்புரை மேற்கொண்ட எல்.முருகன், வீட்டுமனை இல்லாத கூலித் தொழிலாளர்களுக்கு, விரைவில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படும்; கூட்டுறவு வங்கி கடன்கள் உடனடியாக தள்ளுபடி செய்யப்படும் என்று உறுதியளித்துள்ளார்.