100 ஆண்டு வெற்றிக்காக பணியாற்றுங்கள் :ராஜேந்திர பாலாஜி!

அதிமுக 100 ஆண்டுகளுக்குப் பின்னும் வெற்றி பெறும் வகையில் பணியாற்ற வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அறிவுறுத்தி உள்ளார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதி வேட்பாளரும் பால்வளத்துறை அமைச்சருமான கே டி…

அதிமுக 100 ஆண்டுகளுக்குப் பின்னும் வெற்றி பெறும் வகையில் பணியாற்ற வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அறிவுறுத்தி உள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதி வேட்பாளரும் பால்வளத்துறை அமைச்சருமான கே டி ராஜேந்திர பாலாஜி தலைமையில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய ராஜேந்திரபாலாஜி, சாதாரண தொழிலாளியின் மகனான தான் கட்சி கொடி பிடித்து பணியாற்றி அமைச்சராக உயர்ந்திருப்பதாக குறிப்பிட்டார்.

தான் ஒருமுறை உடல் நலக்குறைவோடு இருந்தபோது அப்போலோ மருத்துவமனையில் தன்னை அனுமதித்து சிகிச்சை அளிக்க ஜெயலலிதா உத்தரவிட்டதை நினைவு கூர்ந்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இருவரும் தன்னை வந்து கவனித்துக் கொண்டாதாகவும் ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.