மக்களவைத் தேர்தலில் புதுச்சேரியில் பாஜக சார்பில் நிர்மலா சீதாராமன் போட்டி?

புதுச்சேரியில் பாஜக சார்பில் நிர்மலா சீதாராமன் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  மக்களவை தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் பாஜக போட்டியிடவுள்ள நிலையில் வேட்பாளரை இறுதி செய்ய மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி மற்றும் பாஜக…

புதுச்சேரியில் பாஜக சார்பில் நிர்மலா சீதாராமன் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மக்களவை தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் பாஜக போட்டியிடவுள்ள நிலையில் வேட்பாளரை இறுதி செய்ய மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி மற்றும் பாஜக மேலிட பொறுப்பாளர்கள் மற்றும் மாநில பாஜக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ரங்கசாமி இன்று ஆலோசனையில் ஈடுபட்டார்.

ராஜீவ் காந்தி சதுக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா,  பாஜக மாநிலத் தலைவர் செல்வகணபதி,  சபாநாயகர் செல்வம்,  உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்ட பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

புதுச்சேரியில் நிர்மலா சீதாராமன் போட்டி?

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக தெரிவித்த மூன்று வேட்பாளர்களில் மத்திய நிதி  அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பெயர் முதலிடத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  பட்டியலில் உள்ள புதுச்சேரியை சேர்ந்தவர்கள் போட்டியிட தயக்கம் காட்டுவதால் புதுச்சேரி தொகுதியில் நிர்மலா சீத்தாராமன் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.