“GOAT ரீமேக் படம் இல்லை” – இயக்குநர் வெங்கட் பிரபு விளக்கம்!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும்  ‘கோட்’ ரீமேக் படம் இல்லை என இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.  பா.ரஞ்சித்தின் நீலம் தயாரிப்பு நிறுவனம்,  விஸ்டாஸ் மீடியா இணைந்து தயாரிக்கும் J.பேபி திரைப்படத்தின் பத்திரிக்கையாளர்கள்…

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும்  ‘கோட்’ ரீமேக் படம் இல்லை என இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். 

பா.ரஞ்சித்தின் நீலம் தயாரிப்பு நிறுவனம்,  விஸ்டாஸ் மீடியா இணைந்து தயாரிக்கும் J.பேபி திரைப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் வெங்கட் பிரபு,  பா.ரஞ்சித்,  ஊர்வசி,  அட்டகத்தி தினேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் வெங்கட் பிரபு பேசியதாவது:

“மங்காத்தா எடுக்கும் பொழுது தான் அட்டக்கத்தி படத்திற்கான ஷூட்டிங் போய் கொண்டு இருந்தது.  அப்போது வெற்றிமாறனை அழைத்து அட்டகத்தி படத்தை பார்க்க வைத்தோம்.  ரொம்ப மகிழ்ச்சி அடைந்தார்.  இது தான் ஞானவேல் ராஜா அப்படத்தை வெளியிடுவதற்கான முதல் காரணமாக அமைந்தது.  பா. ரஞ்சித்தும் VP boys உடன் சேர்ந்தவர் தான்.  நாங்க சென்னை 28 படத்திற்கு பிறகு தான் குடும்பமாக ஆனோம். மஞ்சுமல் பாய்ஸ் படத்தை கொண்டாடுவது பெருமையாக இருக்கிறது.  இதன் மூலம் தமிழ்நாடு மக்களுக்கு மொழி முக்கியம் இல்ல.  கன்டன்ட் தான் முக்கியம் என்று தெரிகிறது.

மஞ்சுமல் பாய்ஸ் படத்தை கொண்டாடுவது சந்தோசமாக உள்ளது.  ரஞ்சித்துக்கு பெரிய நன்றி.  தனி ஒருவனாக இருந்து தனி உலகத்தையே உருவாக்கி கொண்டு இருக்கிறார். வெறும் கதையை நம்பி மட்டும் படம் எடுக்கிறார்.  இப்படி கதையை நம்பி மட்டும் படம் எடுக்கிறது சந்தோசமாக உள்ளது”

“கோட் படத்தின் அப்டேட்ஸ் கொடுக்க கூடாது என்றல்ல.  சரியான நேரத்தில் கொடுக்க வேண்டும் அதனால்தான்.  சமூக வலைத்தளங்களில் பயங்கரமாக திட்டுகிறார்கள். கொஞ்சம் பொறுமையாக இருங்கள்.  சரியான நேரத்தில் எப்போது வர வேண்டுமோ வரும். தொழில்நுட்பரீதியாக மிகவும் வலுவான படம்.  கிராபிக்ஸ் தொடர்பான வேலைகள் நிறைய உள்ளன.  ஐந்து ஆறு நிறுவனங்களில் வேலை நடக்கிறது.  எனக்கு லாஸ் ஏஞ்சல்ஸிலும் வேலை இருக்கிறது.  போஸ்ட் புரொடக்‌ஷன் அடிப்படையில் அப்டேட்ஸ் மற்றும் வெளியீட்டு தேதியை முடிவு செய்வோம்.  படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறது.  அப்டேட் வர்றதுக்கு எப்படியும் மே மாதம் ஆகிவிடும்.

இது ரீமேக் படம் கிடையாது.  ப்ரஸ்ஸான படம்.  வெளியான பிறகு பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.  படப்பிடிப்பு பரபரப்பாக போய்க்கொண்டு இருப்பதால் 24/7 மணி நேரமும் விஜய் எங்களுடன்தான் இருக்கிறார்.  படத்தில் பாடல்கள் நிறைய இருக்கிறது. திரையரங்குகளில் எஞ்சாய் பண்ணலாம்.  அஜித் மற்றும் விஜய் இருவரும் வேலை செய்ய ஈஸியானவர்கள்.  இருவரும் இயக்குநருக்கான நடிகர்கள்.  தொடக்கத்தில் இருவரிடமும் பயமாக இருந்தது.  ஒரு ரசிகராக விஜய் இன்னும் கொஞ்சம் படங்களில் நடிக்கலாமே என்பதுதான் ஆசை.  இன்றும் கொஞ்சம் படம் பண்ணுங்களே என்று அவரிடம் சொல்லியிருக்கேன்.  அஜித் கிட்ட பிரியாணி ஸ்பெஷல் என்றால் விஜய் கிட்ட டான்ஸ் ஸ்பெஷல்”

இவ்வாறு இயக்குநர் வெங்கட்பிரபு தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.