முக்கியச் செய்திகள் இந்தியா

விமானத்தில் எமர்ஜென்சி கதவை திறந்த விவகாரம் – மன்னிப்பு கேட்ட பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா

கடந்த மாதம் இண்டிகோ விமானத்தில் எமர்ஜென்சி கதவை திறந்த விவகாரம் தொடர்பாக கர்நாடகாவை சேர்ந்த பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா மன்னிப்பு கேட்டுள்ளதாக மத்திய விமானப்போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டு டிசம்பர் 10ம் தேதி சென்னையில் இருந்து திருச்சி செல்லும் இண்டிகோ விமானத்தில் எமர்ஜென்சி கதவை பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா திறந்ததாக சர்ச்சை எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்த இண்டிகோ விமான நிறுவனம், எமர்ஜென்சி கதவை ஒரு பயணி திறந்ததாகவும், பின்னர் அவர் மன்னிப்பு கேட்டதாகவும் முடித்துக்கொண்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் இந்த விவகாரம் விஸ்வரூபமெடுத்த நிலையில், பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா தான் கதவை திறந்துள்ளார் என்று மத்திய விமானப்போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்திய சிந்தியா உறுதிப்படுத்தி உள்ளார். அந்த சம்பவம் தவறுதலாக நடைபெற்றுவிட்டதாகவும், அதற்காக அவர் மன்னிப்பு கேட்டுவிட்டதாகவும் சிந்தியா விளக்கம் அளித்துள்ளார்.

இதனிடையே, பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா மன்னிப்பு கேட்டாலும், அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்கட்சிகள் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளன. தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த மாதமே இந்த விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழக காவல்துறை வரலாற்றில் முதல்முறை..! ஆவடி காவல் ஆணையரகத்தில் மட்டுமே!

Web Editor

’கத்தார் உலகக் கோப்பை தொடருடன் விடைபெறுகிறேன்’ – லியோனல் மெஸ்ஸி

EZHILARASAN D

காஷ்மீரகத்து தேசியக்கொடி கன்னியாகுமரியில் பறக்கட்டும் – அண்ணாமலை

Dinesh A