நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
ஜெசிந்தா ஆர்டெர்ன் கட்சியின் வருடாந்திர கூட்டத்தில், அர்டெர்ன், “இனிமேலும் அந்த வேலையைச் செய்ய தனக்கு போதுமான அளவு சக்தி இல்லை” என்று கூறினார்.
“நான் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றாலும், நியூசிலாந்துகளை அதிகம் பாதிக்கும் பிரச்சினைகள் இந்த ஆண்டு மற்றும் தேர்தல் வரை அரசாங்கத்தின் மையமாக இருக்கும் என்று எனக்குத் தெரியும்,” என்று அவர் கூறினார்.
ஜெசிந்தா ஆர்டெர்னின் பிரதம மந்திரி பதவிக்காலம் பிப்ரவரி 7-ம் தேதியுடன் முடிவடையும் நிலையில் அக்டோபர் 14-ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்றும் அவர் கூறினார்.
வெளிநாடுகளுடன் நல்ல உறவைப் பேணிக்காத்து வந்த இவர் திடீரென ராஜினாமா செய்வதாகக் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்குக் காரணமாகப் பல கருத்துக்கள் கூறப்படுகின்றன. கொரோனா பரவல், பொருளாதார இழப்பு உள்ளிட்ட பிரச்சனைகளை ஜெசிந்தா ஆர்டெர்ன் சமாளித்து வந்தார். இந்நிலையில் இவரது தலைமையிலான அரசின் செல்வாக்கு குறைந்ததாக கூறப்படுகிறது.
பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தயாராகி வருவதால் தான் விரைவில் ஜெசிந்தா ஆர்டெர்ன் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய உள்ளதாக தகவல்கள் பரவி வந்தன. இந்நிலையில் தான் ஜெசிந்தா ஆர்டெர்ன் தன் பிரமதர் பதவியை ராஜினாமா செய்வதாக திடீரென அறிவித்துள்ளார்.







