“முருகனை வைத்து அரசியல் செய்ய நினைக்கிறது பாஜக” – சீமான் பேட்டி!

தமிழகத்தில் தமிழ் கடவுள் முருகனை வைத்து அரசியல் செய்யலாம் என பாஜக நினைக்கிறது, ஆனால் அதற்கெல்லாம் வாய்ப்பில்லை என்று சீமான் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வையாபுரியில் தொழிலதிபர் SSLF இல்ல விழாவில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது,

“தமிழகத்தில் தமிழ் கடவுள் முருகனை வைத்து அரசியல் செய்யலாம் என பாஜக நினைக்கிறது, ஆனால் அதற்கெல்லாம் வாய்ப்பில்லை.

2026, 2029, 2032 ஆகிய அனைத்து தேர்தல்களும் நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிடும். பாஜகவினர் முருகனை ஒப்புக்கு தூக்கிப் பிடிக்கிறார்கள் நான் உளமாற தூக்கி பிடிக்கிறேன் நான் முருகனின் பேரன், நான் எடுப்பதற்கும் அவர்கள் எடுப்பதற்கும் வித்தியாசம் உள்ளது.

பாஜக நேற்று ஆரம்பிக்கப்பட்ட கட்சி கிடையாது முருகன் நேற்று வரவில்லை, இவ்வளவு நாள் எடுக்காமல் என்ன பண்ணிக் கொண்டிருந்தீர்கள். இங்கே முருகனுக்கு ஒரு மதிப்பு இருக்கிறது முருகனை தொட்டால் ஓட்டு வருமா என்று பார்க்கிறீர்கள் அந்த ஓட்டை நீங்கள் என்ன தொட்டாலும் வேல் வேல் வெற்றிவேல் என்றால் முருகன் அதன் பிறகு அவன் பேரன் எனக்குத்தான்.

இந்த மாநாட்டை அரசியலுக்கு நடத்துகிறீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த சீமான், வேறு எதற்காக நடத்துகிறார்கள் என்றார். அப்படி என்றால் அவர்கள் முன்பே நடத்தி இருக்க வேண்டும். உத்திரபிரதேசத்தில் ராமரை தொடுவார்கள் கேரளாவில் ஐயப்பனை தொடுவார்கள். எங்களுடைய இறையப்பன் முருகனைத் தொட்டறிக்கிறீர்கள் ஒரிசாவில் பூரி ஜெகநாதரை தொடுவீர்கள். இதற்கெல்லாம் ஏமாறுகின்ற கூட்டம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா.

பாஜகவின், அரசியல் மத அரசியல் இல்லாமல் மக்கள் நல அரசியலா  செய்கிறார்கள். இந்த அரசியலை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த சீமான் வாய்ப்பில்லை ராஜா” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.