கடைசி ஒரு நாள் போட்டி : இந்தியா போராடி தோல்வி….. தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து…!

இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இந்தூரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஷுப்மன் கில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

இதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அதிரடி அட்டக்காரர்களான டேரில் மிட்செல் மற்றும் க்ளென் பிலிப்ஸ் ஆகியோர் சதம் விளாசி அசத்தினர்.

இதையடுத்து 338 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டி களமிறங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே தடுமாற்றத்தை கண்டது. இந்திய அணியின் வீரர்களான ரோஹித் ஷர்மா,கேப்டன் கில், ஸ்ரேயஸ், கே.எல்.ராகுல், ஜடேஜா ஆகியோர் சொற்பகளில் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். ஆனால் மறுபக்கம் அவுட் ஆகாமல் விளையாடி வரும் விராட் கோலி சதம் விளாசினார். தொடர்ந்து விளையாடிய அவர் 108 பந்துகளில் 124 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அதே போல் மற்றொரு இந்திய ஆட்டக்காரரான நிதிஷ் குமார் 53 ரன்கள் குவித்து அவுட் ஆனார். இறுதியில் இந்திய அணி 46 ஓவர்களுக்கு 296 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. இதன் மூலம் 41 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றி மூலம் மூன்று போட்டிகளை கொண்ட ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி கைப்பற்றியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.