இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இந்தூரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஷுப்மன் கில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
இதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அதிரடி அட்டக்காரர்களான டேரில் மிட்செல் மற்றும் க்ளென் பிலிப்ஸ் ஆகியோர் சதம் விளாசி அசத்தினர். இந்திய அணி சார்பில் அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்ஷத் ராணா அகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து 338 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டி களமிறங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே தடுமாற்றத்தை கண்டது. இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோஹித் ஷர்மா 11 ரன்களிலும்,கேப்டன் கில் 23 ரன்களிலும் அவுட் ஆகி வெளியேறினர். தொடர்ந்து வந்த ஸ்ரேயஸ், கே.எல்.ராகுல், ஜடேஜா ஆகியோரும் சொற்பகளில் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். ஆனால் மறுபக்கம் அவுட் ஆகாமல் விளையாடி வரும் விராட் கோலி சதம் விளாசி அசத்தியுள்ளார். இது சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலியின் 85வது சதாமகும். அதே போல நியூசிலாந்து அணிக்கு எதிராக விராட் கோலி விளசியுள்ள 7 ஆவது சதம் இதுவாகும்.
மற்றொரு இந்திய ஆட்டக்காரரான நிதிஷ் குமார் 53 ரன்கள் குவித்து அவுட் ஆகினார். தற்போது இந்தியா 42 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 249 ரன்களை எடுத்துள்ளது. மேலும் களத்தில் விராட் கோலி மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் விளையாடி வருகின்றனர்.







