26.7 C
Chennai
September 24, 2023
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

“சுயமரியாதையே இல்லாதவர்களின் கட்சிக்கு பெயர் திமுக” – H. ராஜா அதிரடி பேட்டி

பொது நலன் என்ற போர்வையில் கோவில் நிதியை ஆன்மிகம் தவிர வேறு எந்த ஒரு செயல்பாட்டுக்கும் பயன்படுத்த கூடாது என பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் H.ராஜா தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நென்மேனி கிராமத்தில் உள்ள வைப்பாற்றில் அரசு மணல் குவாரி அமைக்க திட்டமிட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் வைப்பாற்றில் அரசு மணல் குவாரி அமைக்க அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த நிலையில் வைப்பாற்றில் அரசு மணல் குவாரி அமைத்தால் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் பாதிக்கபடும் என்பதால் அரசு மணல் குவாரி அமைப்பதை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் H.ராஜா அவர்களின் தலைமையில் இருக்கன்குடி பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் மற்றும் ஏராளமான பாஜக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்பாட்டத்தில் மணல் குவாரிக்கும் திமுக அரசுக்கும் எதிராக கோஷம் எழுப்பி போராட்டதில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் H.ராஜா இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோவில் சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய H.ராஜா அவர்கள்,

இருக்கன்குடி வைப்பாற்றில் மணல் குவாரி அமைப்பதை அரசு கைவிட வேண்டும் எனவும் எல்லா ஆறுகளில் மணல் அள்ளுவதற்கு நான் எதிரானவன். இந்த பகுதியில் மணல் குவாரி அமையும் பட்சத்தில் விவசாயம் பாதிக்கப்படும். அதனால் இந்த மணல் குவாரியை அரசு கைவிட வேண்டும். இல்லை என்றால் என் தலைமையில் பாஜக மிகப்பெரிய போராட்டத்தை நடத்தும்.

இவ்வாறு தெரிவித்த அவர்,

மேலும் கோவில் நிர்வாகங்களை ஆய்வு செய்ய இந்து சமய அறநிலையத்துறை சார்பில் குழு அமைக்கப்பட உள்ளது குறித்தும் பதில் அளித்தார். அப்போது H. ராஜா அவர்கள் கோவில்களில் ஆய்வு செய்ய யார் செல்கிறார்கள் என்பது முக்கியம். ஏனென்றால் இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லை. இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளே மதம் மாறி இருப்பதாக கூறும் சூழ்நிலையில் கோவில் நிர்வாகத்தை ஆய்வு செய்ய குழு அமைத்து இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. பொது நலன் என்ற போர்வையில் கோவில் நிதியை ஆன்மிகம் தவிர்த்த எந்த ஒரு செயல்பாட்டுக்கும் பயன்படுத்த கூடாது என்றும் கூறினார்.

தொடர்ந்து தங்களது கட்சி தலைவரின் செயல்பாடுகள் குறித்து பேசிய H. ராஜா,

பாஜக மாநில தலைவர் சட்டப்படியாக நடவடிக்கை எடுத்துக்கொண்டு இருக்கிறார். ஒரு காலத்தில் தமிழகத்தில் பாஜக இல்லை என்று சொன்ன காலம் போய் இன்று தமிழகத்தில் எதிர்கட்சி போல் பாஜக செயல்படுகிறது. தனிப்பட்ட முறையில் காயத்ரி ரகுராம் பாதிக்கப்பட்டால் மாநில தலைமையிமோ அல்லது தேசிய தலைமையிடமோ தெரிவிக்காலாம். கட்சி பிரச்சனையை பொது இடத்தில் விவாதிக்க மாட்டேன். கட்சி குறித்து பொது வெளியில் யாரும் பேச வேண்டாம்.

பாரத பிரதமர் மோடி ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுவது குறித்து மத்திய தலைமை எந்த வித முடிவும் எடுக்க வில்லை . இந்தியாவில் உள்ள 544 தொகுதியிலும் நிற்க கூடிய தகுதியான நபர் என்றால் அது பிரதமர் மோடி மட்டும் தான் . அப்படி போட்டியிட்டால் மகிழ்ச்சியுடன் பணியாற்ற கடமைபட்டு இருக்கிறோம். ஆனால் இது பற்றி எந்த முடிவும் மத்திய பாஜகவில் இருந்து அறிவிக்கப்பட வில்லை .

பாஜக மாநில தலைவராக அண்ணாமலை இருப்பதற்கு தகுதி இல்லாதவர் என திமுக அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் கூறிய கருத்துக்கு பதில் அளித்த H. ராஜா திமுக தலைவராக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு தகுதி இருக்கா இல்லையா என்பதை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்த வேண்டும். பாஜக கட்சியை பற்றி அவர் பேச தேவை இல்லை .

கே.என். நேரு இன்பநிதிக்கு குடை பிடிப்பேன் என்று சொல்வதில் இருந்தே சுயமரியாதையே இல்லாதவர்களின் கட்சிக்கு பெயர் திமுக என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது .

இவ்வாறு பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

உக்ரைனிலிருந்து இந்தியர்களை அழைத்து வர அதிக விமானங்கள் இயக்க மத்திய அரசு முடிவு

Halley Karthik

அரசியல் குழப்பங்களை ஏற்படுத்தும் ஆளுநர் ஆர்.என்.ரவி: முரசொலி

EZHILARASAN D

கீழடியில் 9ம் கட்ட அகழாய்வு பணி: சுடுமண்ணால் செய்யப்பட்ட பாம்பின் தலை கண்டெடுப்பு!

Web Editor