அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணையை இந்த வாரமே முடிக்க விருப்பம் -நீதிபதிகள் திட்டவட்டம்

அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பி.எஸ் தொடர்ந்த வழக்கு விசாரணையை, இந்த வாரமே முடிக்க விரும்புவதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பி.எஸ் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி…

அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பி.எஸ் தொடர்ந்த வழக்கு விசாரணையை, இந்த வாரமே முடிக்க விரும்புவதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பி.எஸ் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், இடைக்கால பொதுச் செயலாளர் என்பவர் தேர்தல் நடத்தி தேர்ந்தெடுக்கப்பட்டாரா? என கேள்வி எழுப்பினர்.

பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார் என எடப்பாடி பழனிசாமி தரப்பு விளக்கம் அளித்த நிலையில், அடிப்படை உறுப்பினர்கள்தான் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க முடியும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வாதிட்டது.

அதேபோல, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டதா? எனவும் நீதிமன்றம் கேள்வி எழுப்பிய நிலையில், அந்த பதவிகளுக்கு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை என்பதால் இருவரும் நேரடியாகவே தேர்ந்தெடுக்கப்பட்டதாக ஓபிஎஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதுதொடர்பான விசாரணையில் இபிஎஸ் தரப்பில் ஒன்னரை மணிநேரமும், ஓபிஎஸ் தரப்பில் 2 மணி நேரமும் வாதங்களை முன்வைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த வாரமே வழக்கின் விசாரணையை முடிக்க விரும்புவதாக திட்டவட்டமாக தெரிவித்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.