விடுதி குளியறையில் பாடல் கேட்ட மாணவி: வைரலாகும் மன்னிப்பு கடிதம்!

கல்லூரி விடுதி குளியறையில் பாடல் கேட்டதற்காக தொலைபேசி பறிக்கப்பட்ட நிலையில் மன்னிப்பு கேட்ட மாணவியின் கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது. கேரளாவில், தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர் விடுதி குளியலறையில் தனது செல்போனில்…

கல்லூரி விடுதி குளியறையில் பாடல் கேட்டதற்காக தொலைபேசி பறிக்கப்பட்ட நிலையில் மன்னிப்பு கேட்ட மாணவியின் கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கேரளாவில், தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர் விடுதி குளியலறையில் தனது செல்போனில் பாடல் கேட்டுள்ளார். அப்போது அங்கு சென்ற விடுதி காப்பாளர் மாணவியின் செல்போனை பறித்து சென்றதோடு வருத்தம் தெரிவித்து மன்னிப்ப கடிதம் எழுத சொன்னதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த மாணவி விடுதி நிர்வாகத்திற்கு மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் குளியலறையில் பாடல் கேட்டது தவறு என்றும், இனி இதுபோல் நடைபெறாமல் பார்த்துக் கொள்கிறேன் என கேட்டுக்கொண்டுள்ளார். எனது செல்போனில் முக்கிய தகவல் உள்ளதால் தயவு செய்து அதனை திருப்பி தருமாறு கடிதத்தில் அந்த மாணவி கோரிக்கை விடுத்துள்ளார்.

அந்த கடிதம் இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. கல்லூரி விடுதியில் பாடல் கேட்கக்கூடாதா, நாங்கள் வகுப்பறையிலேயே பாடல் கேட்டு ஆட்டம் போடுவோம் என வாசகர் ஒருவர் பதிவிட்டுள்ளார். அனைவருக்கும் ஒரே சட்டம் தான். விடுதியில் பாடல் கேட்கக்கூடாது என விதி இருக்கும் போது, மீறி கேட்டது மாணவியின் தவறு என மற்றொருவர் பதிவிட்டுள்ளார். வாதங்கள் தொடர்கிறது.. அந்த பதிவு லைக்குகளை அள்ளிக்குவிக்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.