அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் உருவப்படத்தை எரித்ததால் பாஜக நிர்வாகி நேற்றிரவு கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் இன்று காலை இடை நீக்கத்தை திரும்ப பெறுவதாக கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பாலகணபதி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் உருவப்படத்தை பாஜகவை சேர்ந்த இளைஞரணி நிர்வாகிகள் சிலர் எரித்தனர். இதனால் அதிமுக – பாஜக இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுகவினர் வலியுறுத்தினர்.
இதனையும் படியுங்கள்: ஈவிகேஎஸ் இளங்கோவன் நலமுடன் இருக்கிறார்- மருத்துவமனை நிர்வாகம் தகவல்
பாஜக நிர்வாகி தினேஷ் என்பவரை ஆறு மாத காலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக நேற்று பாஜக தூத்துக்குடி கிழக்கு மாவட்ட செயலாளர் கேசவன் அறிவித்தார். இந்த நிலையில் இந்த இடை நீக்கத்தை திரும்ப பெறுவதாக கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பொன்.கணபதி அறிவித்துள்ளார். ஒரே இரவில் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாஜக நிர்வாகி மீண்டும் அந்த அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு கட்சியில் சேர்த்துக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
– யாழன்







