ஆக்ரா கான்ட் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் எஸ்யூவி கார் ஒட்டி வந்து, அதனை விடியோவாக பதிவு செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவின் ஜகதீஷ்புரா பகுதியைச் சேர்ந்தவர் சுனில் குமார். இவர் கடந்த செவ்வாயன்று ஆக்ரா கான்ட் ரயில் நிலைய நடைமேடையில் எஸ்யூவி கார் ஓட்டியதாக அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். இது குறித்து அதிகாரிகள் பேசும்போது, கடந்த மார்ச் 8 அன்று ஆக்ரா கான்ட் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் இந்த சம்பவம் நடந்ததாகவும், பிறகு சமூக ஊடகங்களில் அந்த வீடியோ
வெளிவந்ததை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தை பொறுத்தவரை சுனில் குமார் எப்படி ஒரு எஸ்யூவி காரை ஒரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் பாதுகாப்புக்கு எந்த இடையூறும் இல்லாமல் கொண்டு சென்றார் என்பது
இன்னும் தெளிவாக தெரியவரவில்லை.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சமூக ஊடகங்களில் ஹிந்தி பாடல் பின்னணியுடன் வெளிவந்துள்ள இந்த வீடியோ… இன்ஸ்டாகிராமில் ரீல்களாக பதிவிடவே சுனில் குமார் இதைச் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் இந்த வீடியோ வைரலானதை அடுத்து, ரயில்வே சட்டம் 159 மற்றும் 147-ன் கீழ் சுனில் குமார் மீது ஆர்பிஎஃப் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக, ஆக்ரா பிரிவின் பிரதேச வணிக மேலாளர் பிரஷாஸ்தி ஸ்ரீவஸ்தவா கூறியுள்ளார்.
மேலும், பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடியால் தான் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சமீபத்தில் கூட குருகிராமின் கோல்ஃப் மைதான சாலையில் இதே போன்றதொரு சம்பவமாக, யூடியூபர்கள் இருவர் கரன்சி நோட்டுகளை சாலையில் வீசுவதைக் காட்டும் வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்டு, பின் வழக்கு பதிவு
செய்து கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.
- பி.ஜேம்ஸ் லிசா