துப்பாக்கியால் சுட்டுத் உயிரை மாய்த்துக் கொண்ட பாஜக நிர்வாகியின் மகன்!

பாஜக நிர்வாகியின் மகன் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூனே சின்ச்வாட் நகரத்தை சேரந்தவர் 21 வயதான பிரசன்னா சேகர் சின்சிவாடே. இவரது தாயார் கருணா சின்சிவாடே, பிம்ப்ரி…

பாஜக நிர்வாகியின் மகன் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பூனே சின்ச்வாட் நகரத்தை சேரந்தவர் 21 வயதான பிரசன்னா சேகர் சின்சிவாடே. இவரது தாயார் கருணா சின்சிவாடே, பிம்ப்ரி சின்ச்வாட் மாநகராட்சி பாஜக உறுப்பினராக உள்ளார். பிரசன்னா தன் உறவினருடன் கார் ஷோரூமிற்கு சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பிய அவர், தன் தந்தையின் துப்பாக்கியை பயன்படுத்தி நெற்றிப்பொட்டில் தன்னைத்தானே சுட்டுஉயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

துப்பாக்கி சூட்டின் சத்தம் கேட்டு உறவினர்கள் பதறியடித்து அவருடைய அறைக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது, பிரசன்னா அங்கே இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். விரைந்து அவரை சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து உறவினர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், உயிரிழப்பின் நோக்கம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.