அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தன் ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் தொடர்பில் இருப்பதற்காக ‘45office.com’ என்ற இணையதள பக்கத்தை தொடங்கியுள்ளார்.
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலினா ட்ரம்ப் ஆகியோர் ஒன்றிணைந்து இணையதள பக்கத்தை தொடங்கியுள்ளனர். இந்த இணையதளம் வாயிலாக தங்களுடைய ரசிகர்கள், ஆதரவாளர்கள் ட்ரம்ப்பை தொடர்புகொள்ள முடியும். இதுகுறித்து ட்ரம்ப் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் அமெரிக்க மக்களின் மனவலிமையே ட்ரம்பிற்கும் அவரது மனைவி மெலினாவிற்கும் பலம் சேர்ப்பதாக உள்ளது. இதன்காரணமாக அமெரிக்க மக்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க ட்ரம்ப் இணையதள பக்கத்தைத் தொடங்கியுள்ளார்.

தன்னுடைய இணையதள பக்கத்திற்கு ‘45office.com’ எனும் இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் 45-வது அதிபராக இருந்தார். இதனை நினைவுகூறும் வகையில் அவருடைய இணைய பக்கத்திற்கு ‘45office.com’ என பெயரிடப்பட்டுள்ளது.







