கர்ணன் பட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள முடியாததற்கு நடிகர் தனுஷ் வருத்தமளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாக உள்ள படம் கர்ணன். சமீப நாட்களாக அடுத்தடுத்த படத்தின் பாடல்களை வெளியிட்டு ஒட்டுமொத்த இணையத்தை ஆக்கிரமித்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. வரும் ஏப்ரல் 9ஆம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில் இன்று படத்தின் இசை வெளியிட்டு விழா பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது.
படத்தின் தயாரிப்பாளர் தாணு, இயக்குநர் மாரி செல்வராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் நடிகர் யோகி பாயு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தற்போது, ஹாலிவுட் படப்பிடிப்பிற்காக வெளிநாட்டில் இருக்கும் நடிகர் தனுஷ் படக்குழுவினருக்கு அனுப்பிய கடிதம் பத்திரிக்கையாளர் சந்திப்பில் வாசித்து காண்பிக்கப்பட்டது.
அந்த கடிதத்தில், ‘இத்திரைப்படத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி, உங்களுடன் இப்போது இருந்திருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். கர்ணன் எனக்கு ரொம்ப ஸ்பெஷலான படம், இந்த படம் எனக்கு ஒரு நடிகனா நிறைய விஷயங்களை கத்துக்கொடுத்துச்சு. கர்ணன் வருவான், சீறும் கேள்விகளை ஏந்தி வருவான்’ என்று கூறியுள்ளார்.







