முதல் குழந்தையை வரவேற்ற பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ்

பீகார் துணை முதலமைச்சரான தேஜஸ்வி யாதவ் தனது முதல் குழந்தையை வரவேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டுள்ளார். பீகார் மாநிலத்தில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம்…

பீகார் துணை முதலமைச்சரான தேஜஸ்வி யாதவ் தனது முதல் குழந்தையை வரவேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டுள்ளார்.

பீகார் மாநிலத்தில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் கட்சி வெளியேறியது. இதையடுத்து, முதலமைச்சர் நிதிஷ்குமார் யாதவ் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து, முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவை சந்தித்து கூட்டணி அமைத்தார்.

பின்னர் அம்மாநில ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமைகோரினார். இதையடுத்து,  நிதிஷ்குமார் பீகார் மாநிலத்தில் முதலமைச்சராகவும்,   துணை முதலமைச்சராக ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் பதவியேற்றனர். முப்பத்தி இரண்டே  வயதான தேஜஸ்வி யாதவ்  அரசியலில் கால் பதித்து  தற்போது துணை முதலமைச்சராக தன்னை நிறுத்தி கொண்டுள்ளார். இவர் ஒரு கிரிக்கெட் வீரர் மற்றும் டெல்லி டேர்டேவில்ஸ் அணியில் 2008 காலகட்டத்தில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதி  தேஜஸ்வி யாதவ் தனது நீண்ட நாள் தோழியான ராஜ்ஸ்ரீ யாதவை திருமணம் செய்து கொண்டார். ராஜ்ஸ்ரீ  ஹரியானா மாநிலம் ரேவாரியைச் சேர்ந்தவர். இவர்  சிறுவயதிலிருந்தே டெல்லியில் வசித்து வருகிறார். ராஜ்ஸ்ரீயும் தேஜஸ்வியும் புது டெல்லியில் உள்ள  ஆர்கேபுரம் டிபிஎஸ் பள்ளியில் ஒன்றாகப் படித்தனர்.

இதனையும் படியுங்கள்: ராம்சரண் பிறந்த நாளில் RC 15 படத்தின் டைட்டிலை வெளியிட்ட படக்குழு!

இந்த நிலையில் தேஜஸ்வி – ராஜ்ஸ்ரீ யாதவ் தம்பதிக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. தேஜஸ்வி யாதவ் தனது முதல் குழந்தையின் படத்தை பகிர்ந்து ” கடவுள் பெண் குழந்தையின் வடிவில் மகிழ்ச்சியையும் பரிசையும் வழங்கியுள்ளார்” என பதிவிட்டுள்ளார்.

இதனையும் படியுங்கள்: ராகுல் காந்தி தகுதி நீக்கம்: வயநாட்டில் தீப்பந்தம் ஏந்தி பேரணி நடத்தி போராட்டம்!

இரயில்வே நில ஊழல் வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தேஜஸ்வி யாதவை விசாரித்து வருகிறது. சில தினங்களுக்கு முன்பு சிபிஐ அனுப்பிய சம்மன் மீது  விசாரணைக்கு செல்லாமல் இருந்தார். தனது கர்ப்பினி மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் தன்னால் வர இயலாது என ஊடகங்களிடம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது அவருக்கு பெண் குழந்தை பிறந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/yadavtejashwi/status/1640279436523339777

– யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.