ராம்சரண் பிறந்த நாளில் RC 15 படத்தின் டைட்டிலை வெளியிட்ட படக்குழு!

நடிகர் ராம்சரணின் பிறந்த நாளையொட்டி ஷங்கர் இயக்கத்தில் அவர் நடிக்கும் படத்தில் டைட்டில் ரிவீல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.  தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் மெகா பவர் ஸ்டார் ராம் சரண்…

நடிகர் ராம்சரணின் பிறந்த நாளையொட்டி ஷங்கர் இயக்கத்தில் அவர் நடிக்கும் படத்தில் டைட்டில் ரிவீல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. 

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் மெகா பவர் ஸ்டார் ராம் சரண் இன்று தனது 38-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையடுத்து திரையுலக பிரபலங்கள் பலரும் ராம்சரணுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்கவும்: வசூலில் புதிய சாதனை படைத்த ஜான்விக்-4!

ராம்சரண் தற்போது இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் RC 15 என்ற படத்தில் நடித்து வருகிறார். இன்று அவரின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் RC 15 படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் குறித்து அறிவிப்பு வெளியான நாள் முதல் RC15 என்ற டைட்டிலில் ஷூட்டிங் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இன்று RC15 பட டைட்டில் Game Changer என ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதே போல், இன்று பிறந்த நாள் கொண்டாடும் நடிகர் ராம்சரணுக்கு இயக்குநர் ஷங்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், உலகம் முழுவதும் தனது வசீகரத்தால் ரசிகர்களை கவர்ந்தவர் ராம்சரண். திரையில் கடுமையான மற்றும் தைரியாக இருக்கும் ராம்சரண் பழகுவதற்கு அன்பானவர். அவருக்கு பிறந்நாள் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார். மேலும் RC 15 படத்தின் டைட்டில் ரிவீல் வீடியோவையும் இயக்குநர் ஷங்கர் வெளியிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.