தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் நடைபெற்ற துலாபாத சப்பர வீதி உலாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ள மேலகடையநல்லூர் பகுதியில் உள்ள புகழ்பெற்ற மாரியம்மன் திருக்கோயிலில், ஆண்டுதோறும் பங்குனி மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான விழா கடந்த 16ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய சூழலில், நாள்தோறும் அம்மன் பல்வேறு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வாகனங்களில் பக்தர்களுக்கு தரிசனம் அளித்த நிலையில், பத்தாவது நாளான இன்று துலா பாரத சப்பரமும், சுவாமி சப்பரமும் வீதி உலா வந்தன.
இதில் திரளான பக்தர்கள் அப்பகுதியில் கூடி சுவாமி தரிசனம் செய்ததால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.
—கா. ரூபி







