“பாஜக ஆட்சியில் மிகப்பெரிய நிலக்கரி ஊழல் அம்பலம்” – ராகுல் காந்தி விமர்சனம்!

பாஜக ஆட்சியில் மிகப்பெரிய நிலக்கரி ஊழல் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாகவும், அதானி பல ஆயிரம் கோடி ரூபாயை கொள்ளை அடித்துள்ளதாகவும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில்…

பாஜக ஆட்சியில் மிகப்பெரிய நிலக்கரி ஊழல் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாகவும், அதானி பல ஆயிரம் கோடி ரூபாயை கொள்ளை அடித்துள்ளதாகவும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி,

“பிரதமர் நரேந்திர மோடியின் அபிமான நண்பரான அதானி தரம் குறைந்த ரக நிலக்கரியை மூன்று மடங்கு அதிக விலைக்கு விற்று பல ஆயிரம் கோடி ரூபாயை கொள்ளை அடித்துள்ளார். இது அதிக மின் கட்டணம் செலுத்தும் மக்களின் பணம். இது பல ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது.

https://x.com/RahulGandhi/status/1793179560168902972

 

இந்த வெளிப்படையான ஊழலை கண்டும் காணாமல் இருப்பதற்கும், சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவை விசாரணை நடத்தாமல் இருப்பதற்கும் எத்தனை டெம்போக்கள் பயன்படுத்தப்பட்டன என பிரதமர் பதில் சொல்வாரா?

ஜூன் 4-ம் தேதிக்கு பின்னர் இந்த மிகப்பெரும் ஊழலை புதிதாக பொறுப்பேற்கும் மத்திய அரசு முழுமையாக விசாரித்து, பொதுமக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஒவ்வொரு பைசாவையும் கணக்கெடுக்கும்”

இவ்வாறு ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.