முக்கியச் செய்திகள் குற்றம் சினிமா

காதலன் மீது நடிகை ஜூலி புகார் கொடுத்தது ஏன்?

திருமணம் செய்துகொள்வதாக கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக காதலன் மீது சின்னத்திரை நடிகை ஜூலி போலீசில் புகார் அளித்துள்ளார்.

சின்னத்திரை மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்து வருபவர் ஜூலி என்ற மரியா ஜூலியானா. இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, புகழ் பெற்றவர். தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று மேலும் பிரபலமானார். ’அம்மா தாயே’ என்ற திரைப்படத்தில் நடித்தார். சீரியல்கள், டிவி நிகழ்ச்சிகளில் பங்குபெற்று வருகிறார்.

இவர் , சென்னை செயின்ட் தாமஸ் மவுன்ட் பகுதியில் வசித்து வருகிறார். இவர் அமைந்த கரை பகுதியை சேர்ந்த அழகுக்கலைஞர் மணீஷ் என்பவரை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து காதலனுக்கு இருசக்கர வாகனம், தங்க நகை உள்ளிட்டவற்றை வாங்கிக் கொடுத்ததாகவும், தற்போது தன்னைத் திருமணம் செய்ய மறுப்பதாகவும் அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீசார் காதலன் மணீஷிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement:
SHARE

Related posts

மரச்செக்கு எண்ணெய் தயாரிப்பில் அசத்தும் “மகிழ்” நிறுவனம்

Vandhana

சீனாவில் ஊர் சுற்றும் யானைக் கூட்டம்: வைரல் புகைப்படங்கள்!

Gayathri Venkatesan

சோனியா காந்திக்கு மு.க.ஸ்டாலின் பரிசளித்த திராவிடத்தின் வரலாற்றை சொல்லும் புத்தகம்!

Halley Karthik