முக்கியச் செய்திகள் இந்தியா விளையாட்டு

மும்பை டெஸ்ட்: பிறந்த மண்ணில் 10 விக்கெட் அள்ளி அஜாஸ் சாதனை!

இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், நியூசிலாந்து  சுழல்பந்துவீச்சாளர் அஜாஸ் பட்டேல் 10 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி-20 தொடர், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. டி-20 தொடரை முழுதாக கைப்பற்றிய இந்திய அணி, இப்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. கான்பூரில் நடந்த முதல் டெஸ்டில் போட்டி டிரா வில் முடிந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இரு அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால் மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். இருவரும் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தனர். 44 ரன்கள் எடுத்திருந்த போது சுப்மன் கில், அஜாஸ் பட்டேல் பந்துவீச்சில் டெய்லரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து வந்த புஜாரா , அஜாஸ் பந்துவீச்சில் ரன் எடுக்காமல் வெளியேறினார்.அதை தொடர்ந்து வந்த கேப்டன் கோலியையும் அதே ஓவரின் கடைசி பந்தில் டக் அவுட் ஆக்கினார் அஜாஸ். முதல் நாள் போட்டியின் கடைசி செசனில் ஷ்ரேயாஸ் ஐயர் 18 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து சிறப்பாக விளையாடிய மயங்க் அகர்வால் தனது 4 வது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 221 எடுத்திருந்தது. மயங்க் அகர்வால் 120 ரன்களுடனும் சாஹா 25 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். நியூசிலாந்து தரப்பில் அஜாஸ் பட்டேல் நான்கு விக்கெட் வீழ்த்தி உள்ளார் .

இன்று காலை போட்டித் தொடங்கியதும் சாஹா (27 ரன்கள்) மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து தூக்கினார் அஜாஸ். பின்னர் அக்சர் பட்டேல் களமிறங்கினார். ஒரு பக்கம் விக்கெட் விழுந்தாலும் தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் நங்கூரமாக நின்று ஆடி 150 ரன்களில் ஆட்டமிழந்தார். அக்சர் படேல் சிறப்பான தடுப்பாட்டம் ஆடி அரைசதம் (51) விளாசி ஆட்டமிழந்தார். வேறு யாரும் நிலைத்து நிற்கவில்லை. இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 325 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் பட்டேல் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்தார். இந்திய வம்சாவளியை சேர்ந்த அவருக்கு இந்திய மற்றும் நியூசிலாந்து வீரர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். டெஸ்ட்டில் ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் மூன்றாவதாக அஜாஸ் இடம்பிடித்துள்ளார். இதற்கு முன்பு இங்கிலாந்தைச் சேர்ந்த ஜிம் லேகர், இந்தியாவின் சுழல், அனில் கும்ப்ளே ஆகியோர் 10 விக்கெட் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: திமுகவின் அழுத்தம் காரணமாகவே கைது நடவடிக்கை- வைகோ!

Jayapriya

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் ரஜினிகாந்த்

Halley Karthik

நீட் தேர்வு குறித்து பயம் வேண்டாம்; மாணவர்களுக்கு சீனு ராமசாமி அட்வைஸ் 

Halley Karthik