பாரதிய ஜனதா “துணிவோடு” ” வாரிசை “எதிர்க்கும் -அண்ணாமலை

பாரதிய ஜனதா “துணிவோடு” ” வாரிசை “எதிர்க்கும் என  பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  திண்டுக்கல் மாநகரில் இன்று பாரதிய ஜனதா கட்சியின் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவின் மாநில செயற்குழு…

பாரதிய ஜனதா “துணிவோடு” ” வாரிசை “எதிர்க்கும் என  பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

திண்டுக்கல் மாநகரில் இன்று பாரதிய ஜனதா கட்சியின் உள்ளாட்சி மேம்பாட்டு
பிரிவின் மாநில செயற்குழு கூட்டம் நடத்தப்பட்டது முன்னதாக மோடி பொங்கல்
நிர்வாகிகளால் மண்டபத்தின் முன்பாக வைக்கப்பட்டதை பார்வையிட்ட அண்ணாமலை பிறகு கட்சி நிர்வாகிகளிடம் உரையாற்றினார்.

அதன் பின்னர் நடத்தப்பட்ட பத்திரிக்கையாளர் சந்திப்பில் அண்ணாமலை பேசியதாவது “தமிழகம், தமிழ்நாடு இரண்டும் ஒன்றுதான். மு க ஸ்டாலின் அவர்கள் பலமுறை தமிழகம் என்று பேசியிருக்கிறார். ஆளுநர் தமிழகம் என்று குறிப்பிட்டது ஒன்றும் தவறில்லை.
அரசியலுக்காக திமுக இதை பெரிது படுத்துகிறது. ஆளுநர் தமிழக கலாச்சாரத்தை
முழுவதுமாக உணர்ந்தவர். ஆளுநர் உரை கூட தமிழில் தான் அவர் பேசியிருக்கிறார்.

மேலும், தமிழர் கலாச்சாரத்தை ஒருபோதும் பாரதிய ஜனதா விட்டுக் கொடுக்காது.ஆளுநர்
அறிக்கையில் தமிழகம் அமைதி பூங்கா என்று குறிப்பிடப்பட்டுள்ளது அது பொய்
இப்போதுதான் கோவையில் குண்டு வெடித்துள்ளது. தமிழகம் அமைதி பூங்கா அல்ல .
திமுக கொடுக்கக்கூடிய அறிக்கையை அப்படியே ஆளுநர் படிக்கக் கூடாது. தமிழக
அரசுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால் உண்மையான தகவல்தான்
கொடுக்கிறோமோ என்று பார்த்து ஆளுநரிடம் அளிக்க வேண்டும் என்று கேட்கிறேன்.பல
இடங்களில் மத்திய அரசு மாநில அரசு சமூகமாக செயல்படுகின்றன என்றார்.

அத்துடன், அதிகாரிகளை பொறுத்தமட்டில் மத்திய அரசும் வேண்டும், மாநில அரசும் வேண்டும். வண்டியில் இரு சக்கரம் போன்றது மத்திய அரசும் மாநில அரசும் இரண்டும் ஒரே வேகத்தில் செல்ல வேண்டும். ஒன்றிய அரசு என்பது தவறான கருத்தாகும். திமுக பயன்படுத்தக்கூடிய ஒன்றிய அரசு என்பது தவறான வார்த்தை என்னை பொருத்தமட்டில். 12 பல்கலைக்கழகங்களில் முதலமைச்சரை வேந்தராக அறிவிக்கும் சட்ட வடிவை ஆளுநர்
நிறுத்தி வைத்தார். யுஜிசி விதி 156 படி வரம்பு மீறியதாகும் என கூறினார்.

இதனால் தான் ஆளுநருக்கு முதல்வருக்கும் பிரச்சனை ஏற்பட்டு விட்டது. பிஜேபியின் கருத்து ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும். தமிழக அரசு ஆளுநரிடம் அளித்த 59 சட்ட வடிவில் 15 சட்ட வடிவு மட்டுமே கையெழுத்து இட வில்லை.பத்து ஆண்டு காலம் திமுக ஆட்சியில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் பல வாக்குறுதிகளை அள்ளி
வீசப்பட்டார்.பல இடங்களில் நடக்க முடியாது எனத் தெரிந்தும் வாக்குறுதி
அளித்துள்ளனர் திமுகவினர்.அதனால் அரசு ஊழியர்கள் செவிலியர்கள் தொடர்ந்து
போராட்டம் நடத்தி வருகின்றனர் எம தெரிவித்தார்.

மேலும், திமுகவுக்கு பாரதிய ஜனதா கட்சியின் வேண்டுகோள் ஆளுநருடன் இணைந்து பயணம் செய்யுங்கள். 15 சட்ட வடிவு திருப்பி அனுப்பியதற்கு வரம்பு மீறியது காரணம். அதனால் ஆளுநர் திருப்பி அனுப்பினார். தமிழக முதலமைச்சர் பெருந்தன்மையோடு நடந்து கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுகிறேன். பழனியில் முருகன் கோவிலில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று சொன்னது பாஜக தான் அது தமிழில் தான் நடத்த வேண்டும் என கூறின்றர்.

அத்துடன், திருவண்ணாமலை விழுப்புரம் மாவட்டங்களில் சல்ஜீவன் திட்டத்தில் இணைப்புக்கு பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் பெறப்படுகிறது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு அதல பாதாளத்தில் உள்ளது. திமுகவினர் காவல் நிலையங்களில் காவல்துறை அதிகாரிகளின் கையை கட்டி போட்டுள்ளனர் இதனை முதல்வர் கண்காணிக்க வேண்டும் எம தெரிவித்தார்.

அத்துடன், நடிகர் அஜித் அவர்கள் கடுமையான உழைப்பால் துறையில் சாதித்தவர். விஜய் அவர்களின் உடைய நடனம் சிறப்பாக உள்ளது. நடிகர்கள் மீதும் மிகப்பெரிய அபர்ஞானம் இருக்கிறது. இரண்டு நடிகர்களின் ரசிகர்கள் சண்டையிடக்கூடாது. பாரதிய ஜனதா “துணிவோடு” ” வாரிசை “எதிர்க்கும் என்று செய்தியாளர் சந்திப்பில் அண்ணாமலை பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.