பொங்கல் பண்டிகை – சென்னையில் 340 கூடுதல் இணைப்பு பேருந்துகள் இயக்கம்

பொங்கல் திருநாளை முன்னிட்டு நாளை முதல் கூடுதல் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிக்கைக்கு தமிழ்நாடு முழுவதும் ஜனவரி 12 முதல் 3 நாட்களுக்கு 16 ஆயிரத்து 932 சிறப்பு பேருந்துகள்…

பொங்கல் திருநாளை முன்னிட்டு நாளை முதல் கூடுதல் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிக்கைக்கு தமிழ்நாடு முழுவதும் ஜனவரி 12 முதல் 3 நாட்களுக்கு 16 ஆயிரத்து 932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையிலிருந்து வழக்கமாக இயக்கப்படும் 6 ஆயிரத்து 300 பேருந்துகளுடன், 4 ஆயிரத்து 449 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 10 ஆயிரத்து 749 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து 6 ஆயிரத்து 183 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் பொங்கல் திருநாளை முன்னிட்டு சென்னையில் நாளை முதல் 340 கூடுதல் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

கோயம்பேடு பேருந்து நிலையம், மாதவரம் புறநகர் பேருந்து நிலையம், பூவிருந்தமல்லி பேருந்து நிலையம், தாம்பரம் புதிய பேருந்து நிலையம் மற்றும் கே.கே.நகர் பேருந்து நிலையம் ஆகிய 5 பேருந்து நிலையங்களில் இருந்து நாளை முதல் 14ம் தேதி வரை கூடுதல் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.