பாலக்கோடு அருகே வேன் கவிழ்ந்து 3 பேர் பலி.

துக்க நிகழ்ச்சிக்குச் சென்று திரும்பியபோது விபரீதம். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது   தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த ஜக்கசமுத்திரம் அருகே ஓட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த, 12 பேர், பெட்டமுகிலாலம்…

துக்க நிகழ்ச்சிக்குச் சென்று திரும்பியபோது விபரீதம். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது

 

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த ஜக்கசமுத்திரம் அருகே ஓட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த, 12 பேர், பெட்டமுகிலாலம் அருகே காங்கிரிபுதூரில் உள்ள உறவினர் அண்ணாதுரை என்பவர் இறந்த துக்க நிகழ்ச்சிக்காக பிக்கப் வாகனத்தில் காலை,10:00 மணிக்குச் சென்று விட்டு மீண்டும் சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.பெட்டமுகிலாலம் செல்லும் மலைப்பாதையில் மதியம்,2:00 மணிக்கு வாகனம் வந்துகொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தீபா தங்கம்மாள் ஆகிய இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.மேலும் விபத்தில் பலத்த காயமடைந்த,10க்கும் மேற்பட்டவர்களை அருகே இருந்த பொது மக்கள் உதவியுடன், 108 ஆம்புலன்சு மற்றும் அந்த வழியாக வந்த வாகனங்களின் உதவியுடன் பாலக்கோடு அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

விபத்தில் பலத்த காயமடைந்த 10 பேர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் மாதப்பன் என்பவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். . காயமடைந்தவர்களை மேல் சிகிச்சைக்காகத் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.இதுகுறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.