முக்கியச் செய்திகள் வணிகம்

கடனுக்கான வட்டியை உயர்த்திய வங்கிகள்

ரிசர்வ் வங்கி, திடீரென ரெப்போ ரேட் விகிதத்தை உயர்த்தியது. நடுத்தர மக்கள் அஞ்சியது போலவே வங்கிகள், கடனுக்கான வட்டியை உயர்த்தியுள்ளன. இதனிடையே பாரத ஸ்டேட் வங்கி இரண்டாவது முறையாக வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. எந்த வங்கி எவ்வளவு வட்டியை உயர்த்தியுள்ளது என்பதை பார்க்கலாம்.

யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே, என்பதற்கு ஏற்ப, ரிசர்வ் வங்கியின் வட்டி விகித உயர்வு அறிவிப்பானது , வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய கடனுக்கான வட்டியை உயர்த்துவதை முன் கூட்டியே உறுதி செய்யும் வகையில் அமைந்து விட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கடந்த வாரத்தில். இந்திய ரிசர்வ் வங்கி திடீரென வட்டி விகிதத்தினை 40 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து, 4.40 சதவீதமாக அதிகரித்தது. நிகர ரொக்க கையிருப்பு விகிதத்தையும் அதிகரித்தது. இதனால் பல வங்கிகள் கடனுக்கான வட்டியை உயர்த்தின. இதனால் மாதத் தவணை செலுத்தும் வாடிக்கையாளருக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது.

நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, அதன் எம்சிஎல்ஆர் விகிதத்தினை . 10 அடிப்படை புள்ளிகள் அதிகரித்தது. இதன் படி கடனுக்கான வட்டி விகிதம், முறையே 7.20%, 7.40%, மற்றும் 7.50% ஆகவும் உள்ளது.
மற்றொரு பொதுத்துறை வங்கியான ,கனரா வங்கி. ரெப்போ விகிதத்துடன் இணைக்கப்பட்ட கடனுக்கான வட்டி விகிதம் (RLLR), 7.30% ஆக அதிகரித்துள்ளது. பொதுத்துறையை சேர்ந்த யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் வட்டி விகிதம். இ பி எல் ஆர் (EBLR) விகிதம் 6.80% ஆக உயர்வு கண்டுள்ளது.

பொதுத்துறையை சேர்ந்த பாங்க் ஆப் இந்தியாவில் வட்டி விகிதம் 7.25% ஆக அதிகரித்துள்ளது. பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியின் வட்டி விகிதமானது, ஜுன் 1 முதல் 6.90 சதவீதமாக அதிகரிக்கப்படவுள்ளது. எம்சிஎல்ஆர் விகிதமும், மாற்றியமைக்கப்பட்டுள்ளது.எம்சிஎல்ஆர் விகிதம் முறையே 6.60%, 6.65%, 6.75% மற்றும் 6.95% ,7.25%, 7.55% ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு பொதுத்துறை வங்கியான பாங்க் ஆஃப் பரோடா, சில்லறை கடன்களுக்கான வட்டி விகிதத்தை 6.90 சதவீதமாக அதிகரித்துள்ளது.எம்சிஎல்ஆர் விகிதம், முறையே 6.60%, 7.05%, 7.10% , 7.20% ,7.25% , 7.70% ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
முன்னணி தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி அதன் I-EBLR விகிதத்தினை ஆண்டுக்கு 8.10 சதவீதமாக உயர்த்துவதாக அறிவித்திருந்தது. EBLR என்பது ரெப்போ விகிதம் போல வெளிப்புற அளவுகோல்களின் அடிப்படையில் வங்கிகளால் நிர்ணயிக்கப்பட்ட கடன் விகிதமாகும்.

மற்றொரு ,முன்னணி தனியார் வங்கியான , ஹெச் டி எஃப் சி வங்கியின் ,எம் சி எல் ஆர் விகிதத்தில் 25 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு நாளுக்கான எம்சிஎல்ஆர் விகிதம் 7.15% ஆகும். இதே 1 வருடத்திற்கான எம்சிஎல்ஆர் விகிதம் மற்றும் இரு வருடத்திற்கான எம்சிஎல்ஆர் விகிதம் முறையே 7.50% மற்றும் 7.60% ஆகும். இதே 3 ஆண்டுகளுக்கான எம்சிஎல்ஆர் விகிதம் 7.70% ஆகும்.

தனியார் வங்கியான யெஸ் வங்கியின் எம்சிஎல்ஆர் விகிதம் 10 – 15 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. யெஸ் வங்கியின் இணையதள அறிக்கையின் படி, ஒரு நாள், 1 மாதம் மற்றும் 3 மாதம், 6 மாத எம்சிஎல்ஆர் விகிதம் முறையே, 6.85%, 7.30% மற்றும் 7.45%, 8.25% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதே ஓராண்டுக்கான விகிதம் 8.60% ஆகும்.

ஆக்ஸிஸ் வங்கியின் வட்டி விகிதம் ஏப்ரல் மாதத்தில் 5 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கப்பட்டது. இந்த விகிதமானது ஒரு நாள் , 1 மாதம், 3 மாதம் மற்றும் 6 மாதங்களுக்கு முறையே, 7.15%, 7.15%, 7.25% மற்றும் 7.30% ஆகவும் அதிகரித்துள்ளது. இதே ஓராண்டுக்கான விகிதம் 7.35% ஆகும், 2 ஆண்டுகளுக்கான விகிதம் 7.45% ஆகும். 3 ஆண்டுகளுக்கான விகிதம் 7.50% ஆகும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram