இலங்கையைப் போன்றே இந்தியா-ராகுல்

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலை நிலவி வருகிறது. பால் முதல் எரிவாயு உருளை வரை பொதுமக்களின் அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளது. இலங்கைவாழ் தமிழர்களில் பலரும் சட்டவிரோதமாக…

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலை நிலவி வருகிறது. பால் முதல் எரிவாயு உருளை வரை பொதுமக்களின் அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளது.

இலங்கைவாழ் தமிழர்களில் பலரும் சட்டவிரோதமாக கடல்மார்க்கமாக குடும்பத்துடன் தமிழகத்தில் தஞ்சம் புகுந்தனர். இலங்கையில் இன வேறுபாடு இன்றி அனைத்து தரப்பு மக்களுக்கு இலங்கையில் ஆளும் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். போராட்டம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்த நிலையில், அந்நாட்டின் பிரதமர் மகிந்த ராஜபட்சே தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றுள்ளார். அதிபர் கோத்தபய ராஜபக்சேவும் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர்  ராகுல் காந்தி, டுவிட்டரில் இலங்கையை இந்தியாவுடன் ஒப்பிடும் வரைபடம் ஒன்றை டுவிட்டரில் பகிர்ந்தார். அத்துடன், மக்களை திசைதிருப்புவதால் மட்டும் உண்மையை மாற்றிவிட முடியாது. இலங்கையைப் போன்றுதான் இந்தியாவும் இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

 அந்த வரைபடத்தை ராகுல் காந்தி மூன்றாக பிரித்துள்ளார் . முதல் பகுதியில் 2017ஆம் ஆண்டிலிருந்து 2020ஆம் ஆண்டு வரை இரு நாடுகளிலும் நிலவும் வேலையின்மை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கொரோனாவால் ஊரடங்கு அமல்படுத்த காலத்தில் (2020ம் ஆண்டு தொடக்கம்) வேலையின்மை அதிகரித்ததாக அந்த வரைபடம் காட்டுகிறது.
இரண்டாவது பகுதியில், இரு நாடுகளிலும் 2017 முதல் 2021 வரை பெட்ரோல் விலை குறித்து ஒப்பிடப்பட்டுள்ளது. பெட்ரோல் விலையும் இரு நாடுகளிலும் அதிகரித்துள்ளது.
மூன்றாவது பகுதியில் வகுப்புவாத வன்முறைகள் இரு நாடுகளிலும் 2020-2021 காலகட்டத்தில் அதிகரிக்கப்பட்டுள்ளது காட்டப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.