பேரறிவாளன் விடுதலையை திமுக உரிமை கொண்டாட முடியாது – ஜெயக்குமார்

பேரறிவாளன் விடுதலை, அதிமுக அரசின் துணிச்சல் சட்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்றும் இதில் திமுக உரிமை கொண்டாட முடியாது என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.   சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள்…

பேரறிவாளன் விடுதலை, அதிமுக அரசின் துணிச்சல் சட்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்றும் இதில் திமுக உரிமை கொண்டாட முடியாது என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

 

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பேரறிவாளன் விடுதலைக்காக எடப்பாடி அரசு 2018 ஆம் ஆண்டு அமைச்சரவையை அவசரமாக கூட்டி தீர்மானம் நிறைவேற்றி அதனை ஆளுநருக்கு அனுப்பி வைத்ததாக கூறினார். வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று வழங்கி இருப்பதற்கு காரணம் ஜெயலலிதா அரசு தீர்மானம் நிறைவேற்றியது தான் என குறிப்பிட்டார்.

 

சரியான வகையில் தீர்மானம் இன்று நிறைவேற்ற பட்டு இருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் சொன்னால், அதிமுக அரசு சிறப்பான வகையில் செயல்பட்டு இருக்கிறது. இந்த விடுதலைக்கு முழு சொந்தக்காரர்கள் அதிமுக தான் என தெரிவித்தார். 7 பேர் விடுதலையில் திமுக அரசு துரோகம் செய்து விட்டு, இன்று போய் அவர்களை கட்டி அழுவது உள்ளிட்ட செயல்களை தமிழ்நாடு மக்கள் நிச்சயம் ஏற்றுகொள்ள மாட்டார்கள் என ஜெயக்குமார் சாடினார்.

 

எழுவர் விடுதலைக்கு உடந்தையாக திமுக அன்றே முயற்சி செய்திருக்கலாம், ஆனால் இன்று நாங்கள் எடுத்த முயற்சியில் திமுக கொண்டாடுவதால் எந்த பயனும் இல்லை. 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும், அதுதான் அதிமுகவின் நிலைபாடு, திமுக போல இல்லை என கூறினார். பேரறிவாளன் போன்று மீதம் இருக்க கூடிய 6 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என ஜெயக்குமார் கேட்டுக்கொண்டார். மேலும் பேரறிவாளனின் எதிர்காலத்திற்கு மத்திய மாநில அரசுகள் உதவி செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

 

தமிழர்களின் குரலான, எழுவர் விடுதலை தான், அன்று இன்று நாளை எங்களின் குரலாய் கேட்கும என்று கூறிய ஜெயக்குமார், பேரறிவான் விடுதலையில் உரிமை கொண்டாட திமுக வுக்கு எவ்வித அருகதையும் இல்லை என சாடினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.