தமிழ் நாடு முதலமைச்சர் விஜய் வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் ஆகியவற்றின் அருகாமையில் அமைந்துள்ள டாஸ்மார்க் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூட உத்தரவிட்டிருந்தார். அதன்படி தமிழகத்தில் 5 மண்டலங்களில் மொத்தம் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது.
முதலமைச்சரின் இந்த நடவடிக்கைக்கு அரசியல்வாதிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளில் 21 வயதுக்கு உட்பட்டோருக்கு மதுபானங்கள் விற்க கூடாது என்று தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக டாஸ்மார்க் கடைகளுக்கு அனுப்பப்பட்ட அறிவுறுத்தலின்படி , தமிழ்நாடு மதுபான சில்லரை விற்பனை விதிகள் 2003, விதி 11ஏ படி டாஸ்மாக் கடைகளில் 21 வயதுக்கு உட்பட்டோருக்கு மதுபானங்கள் விற்க கூடாது. மீறி விற்பனை செய்பவர்களுக்கு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வயதில் சந்தேகம் ஏற்பட்டால், ஆதார், ஓட்டுநர் உரிமம் போன்றவற்றை ஆயு செய்து விற்பனை செய்யுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




