தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தவெக ஆட்சியமைத்துள்ளது. இதனை தொடர்ந்து திமுக ஆட்சி காலத்தில் தமிழ் நாடு அரசின் தலைமை அரசு வழக்கறிஞராக பி.எஸ். ராமன் தனது பதவியை ராஜினாம செய்தார். இதனால் அந்த பதவி காலியானது
இந்த நிலையில் தமிழ் நாடு அரசின் தலைமை அரசு வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான அராசாணையை தமிழ் நாடு அரசு வெளியிட்டுள்ளது. அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் விரைவில் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
யார் இந்த விஜய் நாராயண்…?
விஜய் நாராயண், தனது பள்ளி கல்வியை பீகார் மாநிலத்தில் இருந்த ராஞ்சியில் முடித்தார். பின்னர் தனது பட்டப்படிப்பை சென்னை லயோலா கல்லூரியிலும், சட்டப்படிப்பை சென்னை அரசு சட்டக் கல்லூரியில் முடித்தார். தொழிலாளர், அரசியலமைப்பு, நிர்வாகம், வணிகம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் இவர் ஆஜராகியுள்ளார்.
2004-ஆம் ஆண்டு இவருக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் அந்தஸ்து வழங்கப்பட்டது. இந்திய சட்ட நிறுவனத்தின் சென்னை மண்டல செயற்குழு உறுப்பினராக இந்திய தலைமை நீதிபதியால் 2012-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். திருச்சியில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளியின் பொதுக்குழு உறுப்பினராக கடந்த பிப்ரவரி மாதம் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியால் நியமிக்கப்பட்டார். சென்னை உயர் நீதிமன்றத்தின் தொன்மையான வழக்கறிஞர் சங்கமான சென்னை பார் அசோசியேசனின் தலைவராகவும் விஜய் நாராயண் இருந்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி காலத்தில் 2017 முதல் 2021ஆம் ஆண்டு வரை தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக பதவி வகித்துள்ளார்.




