GOLDRATE | தங்கம் விலை மீண்டும் உயர்வு…!

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ. 400 உயர்ந்துள்ளது.

தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக நேற்று தங்கம், வெள்ளியின் விலை அதிரடியாக உயர்ந்தது.

அதன் படி நேற்று காலையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.8,560-ம், கிராமுக்கு ரூ.1,070-ம் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,23,200-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.15,400-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தொடர்ந்து நேற்று மாலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,200 குறைந்து ஒரு சவரன் ரூ.1,20,000-க்கும் கிராமுக்கு ரூ.400 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.15,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன் படி சென்னையில் ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.15,050-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் சவரனுக்கு ரூ.400 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,20,400-க்கும் விற்பனையாகிறது.

அதேநேரம் வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. அதன் படி வெள்ளி விலை கிராமுக்கு 5 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.315-க்கும், 1 கிலோ ரூ.5000 குறைந்து ரூ.3.15 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.