அயலான் ஆஸ்கர் வெல்ல தகுதியுள்ள இந்திய படம் என அயலான் பார்த்துவிட்டு ஸ்வீட் கொடுத்து ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டினார்.
தென்னிந்திய ஷாருக்கான், சின்ன ரஜினி, கோலிவுட் பிரின்ஸ் என்று ரசிகர்களாலும் வசூல் சக்ரவர்த்தி என்று தயாரிப்பாளர்களாலும் ரஜினிக்கு பிறகு தமிழ்நாட்டு தயாரிப்பாளர்கள் மட்டும் அல்ல தென்னிந்தியாவின் தயாரிப்பாளர்கள் பலரும் கியூவில் நிற்கும் அளவுக்கு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத சக்தியாக மேக்சிமம் கேரண்டி ஹீரோவாக எம்ஜிஆர், ரஜினி வரிசையில் மிக குறுகிய காலத்தில் முன்னணி நடிகராக உயர்ந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன்.
இவரது வருத்தப்படாத வாலிபர் சங்கம் இன்றளவும் தொலைக்காட்சி ஒளிபரப்பில் ரஜினி படங்களுக்கு இணையான வரவேற்பை பெற்றுள்ளது. மெரினாவில் தொடங்கிய வசூல் புரட்சி ரஜினிமுருகன், ரெமோவில் ரஜினிக்கு அடுத்த தொடர் வெற்றி நாயகன் என்கிற அளவுக்கு பாய்ச்சலில் சென்றது. சீமராஜா படத்தின் ஓபனிங் முன்னணி நடிகர்களையே கலக்கத்தில் தள்ளியது யதார்த்தமான உண்மை.
டாக்டர் போன்ற படங்கள் பி அண்ட் சி ஏரியாக்களில் 80 ஆண்டுகால சினிமாவில் எம்ஜிஆரின் உலகம் சுற்றும் வாலிபன் , சிவாஜியின் திருசூலம் , ரஜினியின் முரட்டுக்காளை, கமல்ஹாசனின் சகலகலா வல்லவன், பாக்யராஜின் முந்தானை முடிச்சு, விஜயகாந்தின் கேப்டன் பிரபாகரன், பிரபுவின் சின்னதம்பி போல் வசூல் புரட்சியையே நடத்தியது என்பது மறுக்க முடியாத மறைக்கப்பட்ட புதையல்.
இடையில் ஒரு சில படங்கள் பெரிய வெற்றியை அடையவில்லை என்றாலும், SK-வின் பேமிலி ஆடியன்ஸ் பலத்தால் வசூல் ரீதியாக பெரிய பின்னடைவை ஏற்படுத்தவில்லை. ரஜினிக்கு பிறகு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் விதத்திலேயே இவரது படங்கள் இருப்பதால் அந்த வட்டார ரசிகர்களின் அசைக்க முடியாத இளவரசர் ஆனார்.
இவரது நடிப்பில் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருக்கும் பெரிய பட்ஜெட் படமான அயலான் சுமார் 120 கோடி பட்ஜெட்டில் தயாராகி வருகின்றது. எந்திரன், 2. O வரிசையில் மிகுந்த பொருட் செலவில் தயாரிக்கப்படும் இந்த படம் சி ஜி தொழில்நுட்பம் அதிக அளவில் பயன்படுத்தப்படும் முதல் இந்திய படம் என்று சொல்லப்பட்ட எந்திரன், 2. O படங்களுக்கு இணையாக பிரம்மாண்டம் கொண்ட படமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
தயாரிப்பு தரப்பு இதுவரை 70 கோடிக்கும் மேல் சிஜி-க்காகவே செலவிட்டுள்ளதாம். இந்திய சினிமாவில் முதன்முறையாக கிராபிக்ஸ் பயன்படுத்தப்பட்ட படமான ராஜா சின்ன ரோஜா படத்தைப் பார்த்து தான் நான் ரஜினி ரசிகன் ஆனேன் என்று சொன்ன சிவா இன்று அவரது தலைவருக்கு அடுத்து மிக பிரம்மாண்டமான படத்தில் நடிப்பது இங்கே வியப்புக்குரியது. அதேபோல் இந்த படத்தை பின்னணி இசைக்காக பார்த்த ஏ.ஆர்.ரஹ்மான் ”இது நிச்சயம் சாதாரண தமிழ் படமே அல்ல. உலகத்தரம் வாய்ந்த படம், ஹாலிவுட் படங்களுக்கு இணையாக இருக்கிறது. இதற்கு சாதாரணமாக வேலை செய்துவிடக்கூடாது. நேரம் எடுத்து பொறுமையாக செய்ய வேண்டும்” என்று மிகவும் சிரத்தை எடுத்து பின்னணி இசைக்கோர்ப்பில் ஈடுபட்டு வருகின்றாராம்.
மேலும் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்றும் அனைவருக்கும் ஸ்வீட் கொடுத்து பாராட்டினாராம். இதனால் சிவகார்த்திகேயன் மற்றும் தயாரிப்பாளர், இயக்குனர் உள்ளிட்ட அயலான் திரைப்படக் குழுவினர் மிகவும் நம்பிக்கையோடு இருக்கின்றார்களாம். மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் நிச்சயம் இந்த படம் ஆஸ்கர் விருதுக்கு தகுதியான படம் என்றும் புகழ்ந்ததில், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட படகுழுவினர் இன்ப அதிர்ச்சியில் இருக்கிறார்களாம். அயலான் நம்ம தமிழ் படம் அதனால் நிச்சயம் சாதனை படைக்கட்டும்.
- திராவிட ஜீவா







